ETV Bharat / bharat

'யார் வேண்டுமானாலும் இனி கரோனா சோதனை மேற்கொள்ளலாம்'

மருத்துவ அனுமதிச் சீட்டு இன்றி, தேவைப்படுவோருக்கெல்லாம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை
author img

By

Published : Sep 5, 2020, 11:10 PM IST

நாட்டில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுவதாகவும், பரிசோதனை மேற்கொள்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துவந்தனர். இந்நிலையில், மருத்துவ அனுமதிச் சீட்டு இன்றி, தனி நபர்களின் தேவைகளுக்கு ஏற்ப இனி கரோனா பரிசோதனை மேற்கொள்ள தற்போது மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தேசியப் பணிக்குழுவின் பரிந்துரையின்படி இந்தப் புதிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கு ஏற்ப, எளிமையானதாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை இனி பின்பற்றுமாறும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய ஆலோசனைகள் கரோனா பரிசோதனை முறையை மேலும் எளிதாக்கியுள்ளதாகவும், மேம்பட்ட சோதனைகளை எளிதாக்குவதற்கு மாநில அலுவலர்களுக்கு அதிக சுதந்திரத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் இதில் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ’தேவைக்கேற்ப சோதனை’ என்னும் புதிய பிரிவு இந்தக் கரோனா பரிசோதனை வழிகாட்டுதல்களில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், இந்தப் பரிசோதனை முறைகளை எளிமையாக்குவதில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சேர்த்து, மொத்தம் 1,647 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இல்லை’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.