புதிய வகை கரோனா வைரஸ் ஏற்படுத்திய கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றம் நேற்று (செப்.14) தொடங்கியது.
அப்போது, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு தற்கொலைகள், வேலை வாய்ப்பு இழப்பு, பொருளாதார இழப்பு குறித்த விவாதத்தை எழுப்பின.
இதற்கிடையில் எட்டு மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் அறையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், லடாக் நிலவரம் குறித்து இன்று மக்களவையில் உரையாற்ற உள்ளார். இந்திய மற்றும் சீனப் படைகள் ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து மோதலில் ஈடுபட்டன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: நீட் தற்கொலை; நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு சரமாரி கேள்வி!