ETV Bharat / bharat

கரோனா சூழலில் உழைப்பாளர்களின் முக்கியத்துவம்! - தொழிலாளர்கள் தினம்

இன்று உழைப்பாளர்கள் தினம். (மே 1) கரோனா சூழலில் இந்த தேசத்தை வளர்த்தெடுத்த அவர்களின் நிலை பற்றி அறிவோம்...

Importance of labour in times of covid-19

author img

By

Published : May 1, 2020, 12:49 PM IST

Updated : May 1, 2020, 2:06 PM IST

இந்தியாவில் உழைப்பாளர்கள்

உழைப்பாளர்கள் பற்றிய சமீபத்திய புள்ளி விவரப்படி, அவர்களில் 25 சதவிகித கிராமப்புறக் குடும்பங்கள் மற்றும் 12 சதவிகித நகர்ப்புறக் குடும்பங்கள் தங்கள் வருவாய்க்கு தற்காலிகப் பணியையே நம்பியிருக்கின்றனர்.

அவர்களில் நகர்ப்புறத்தில் உள்ள 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் சம்பளம் வரும் வழக்கமான பணிகளில் இருந்தாலும், பணி உத்தரவாதம் கிடையாது. விவசாயம் சாராத தொழிலிலுள்ள 70% பேருக்கு எந்தவிதமான எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமும் கிடையாது, அதில் பாதிக்கும் அதிகமானோருக்கு சம்பள விடுப்பு கிடையாது. அவர்களுக்கு சுகாதார நலன் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

கரோனா ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பியிருப்பது, மார்க்கெட், தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் சிக்கல் நிலவுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் முடங்கியுள்ளதால், தொழிலாளர் பலம் இல்லாமல் நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன.

இந்தச் சூழலால் தொழிற்சாலைகள் குறைந்த அளவிலேயே பொருட்களைத் தயாரிக்கின்றன. ஊரடங்கால் அத்தியாவசியப் பொருட்களின் தயாரிப்பை அதிகரிக்க வேண்டிய நிலையில், ஆள் பற்றாக்குறையால் பணிகள் முடங்கியுள்ளன.

அத்தியாவசியப் பொருட்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கு உதவும்படி வர்த்தக சங்கங்களை டெல்லி அரசாங்கம் கேட்டுள்ளது.

சந்தைகள் நிலவரம்

பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய சந்தைகளில் வழக்கமான வேலைகளைச் செய்யவே ஆள் பற்றாக்குறை உள்ளது. அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்குக் கொண்டு சென்று விநியோகிக்க அதிகமான ஊழியர்கள் தேவை.

போக்குவரத்து பழைய நிலைமைக்குத் திரும்பும்வரை இந்த சிக்கலுக்குத் தீர்வு இல்லை.

ஊழியர்களின் ஊதியத்துக்கும், பொருட்களின் விலைக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஊழியர்களின் ஊதியம் குறைவாக இருந்தால்தான் பொருட்களின் விலை குறைவாக இருக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் முடங்கியுள்ள வேளையில், உள்ளூர்த் தொழிலாளர்கள் அவர்களை விட அதிக ஊதியம் கேட்கின்றனர். இதனால் பல வர்த்தகர்கள் தங்கள் வேலைகளை நிறுத்திவைத்துள்ளனர்.

விவசாயம்

விவசாயப் பணியும் ஆள் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல் விவசாயம் செய்துவந்த பஞ்சாப் விவசாயிகள் பலர், பருத்தி விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். நெல் விவசாயம் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்துவருகிறது.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 24 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் விவசாயம் சார்ந்த பணிகளில் கூலித்தொழிலாளிகளாய் இருப்பதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு கணித்துள்ளது.

தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள்

- ஊதியத்தில் பிடித்தம்

முந்தைய மாதங்களுக்கான ஊதியம் வழங்க மறுத்தல்,

புலம்பெயர் தொழிலாளர்கள் இடப்பெயர்வு

பாதுகாப்பு மற்றும் இருப்பிடப் பற்றாக்குறை,

உணவு கிடைப்பதில் நிச்சயமற்ற தன்மை

தொழிலாளர்கள் நிலையில் மாற்றம்

சந்தை போக்குகளும், ஊரடங்கும் இதனால் பாதிக்கப்பட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. வாழ்வாதாரம் முடங்கியுள்ள இந்த வேளை, அவர்களை கொடூர வறுமைக்கு தள்ளும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.

ஊரடங்கால் ஒப்பந்த ஊழியர்களும் கடுமையான பாதிப்பை சந்தித்துவருகின்றனர். மத்திய தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சகம், தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஊரடங்கு இந்தியாவில் உள்ள சந்தை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் போக்கில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறது. ஊரடங்கு முடிந்த பிறகு, புலம்பெயர் தொழிலாளர்களின் வருகை அதிகளவில் குறையும், அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களிலேயே குறைந்த ஊதியத்தில் பணி செய்யும் சூழல் ஏற்படும் என துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

குறைந்த ஊதியத்தில் பணி செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லாததால், சந்தையில் பொருட்களின் விலை அதிகரிக்கும். அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை மக்கள் வாங்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.

Last Updated : May 1, 2020, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.