குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது, தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்ட்க்கு உதவி செய்தது என கௌஹாத்தி ஐ.ஐ.டி. பேராசிரியர் அருப்ஜோதி சைக்கியா மீது பல்வேறு குற்றஞ்சாட்டுகள் உள்ளது.
இந்த குற்றஞ்சாட்டுகளின் பேரில் அவருக்கு என்ஐஏ (தேசிய பாதுகாப்பு முகமை) ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய இரு தினங்கள் தேசிய பாதுகாப்பு முகமை காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக இன்றும் என்ஐஏ அலுவலர்கள், பேராசிரியர் அருப்ஜோதி சைக்கியாவிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை சுமார் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. கடந்தாண்டு டிசம்பர் 11, 12ஆம் தேதிகளில் அஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடந்தது.
மாநில நிதியமைச்சர் ஹிமாந்த் பிஸ்வாஸ் சர்மா வீட்டின் அருகே நடைப்பெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக காவலர்கள் விசாரணையை விரிவுப்படுத்தினர். இதில் சில அறிவுஜீவிகள் மீதும் குற்றஞ்சாட்டு எழுந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: இளம்பெண்ணைக் கடத்தி காருக்குள்ளேயே கட்டாய தாலி கட்டிய இளைஞர்