டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புகளுக்கிடையே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-
பாஜகவினர் ஒவ்வொரு நிமிடமும், நொடியும் தேசப்பக்தி குறித்து பாடம் எடுக்கின்றனர். மற்றவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துகின்றனர். ஆனால் உண்மையான தேசவிரோதிகள் அவர்கள்தான்.
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை பிரக்யாசிங் தாகூர் புகழ்கிறார்.
மறுபுறம் சுதந்திர போராட்டத்தை நாடகம் என பாஜகவை சேர்ந்த ஆனந்த் குமார் ஹெக்டே கூறுகிறார். இவர்களுக்கு (பாஜக) மகாத்மா காந்தி மீது உண்மையாக அன்பு இருந்தால், பிரக்யாசிங் தாகூர், ஆனந்த் குமார் ஹெக்டே ஆகியோரை கட்சியை விட்டு நீக்கி வைக்கட்டும்.
மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘முடிந்தால் முதலமைச்சரை அறிவியுங்கள்’ - பாஜகவிற்கு கேஜ்ரிவால் சவால்!