ETV Bharat / bharat

‘எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம்’ - ப. சிதம்பரம் காட்டம்!

டெல்லி: எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம் என ப. சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

p chidambaram
author img

By

Published : Sep 18, 2019, 5:18 PM IST

Updated : Sep 18, 2019, 5:51 PM IST

மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரது ட்விட்டர் பக்கத்தில், இந்தி திணிப்புக்கு எதிராக,

“தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான்.

ப. சிதம்பரம் ட்வீட்
ப. சிதம்பரம் ட்வீட்

எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம். இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள மற்றோரு ட்வீட்டில், இந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாகவும் தனது குடும்பத்தினரை ட்வீட் செய்யுமாறு ப. சிதம்பரம் கேட்டுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Last Updated : Sep 18, 2019, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.