இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டதால் பரிசோதனையை விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
கரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டதைத் தொடர்ந்து புதிய நெறிமுறைகளை ஐ.சி.எம்.ஆர் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை நடத்த வேண்டும்.
- தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- கரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களில் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கும் கட்டாயம் பரிசோதனை.
- தொழிலாளர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால், பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
- கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்களுக்குச் சோதனை செய்ய வேண்டும். ஒருவருக்கு கரோனா இருப்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால், சோதனை செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மேலும் 3 மாதங்களுக்கு EMI ஒத்திவைக்க வாய்ப்பு - ஆய்வில் தகவல்