ETV Bharat / bharat

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு குறித்த திருத்தப்பட்ட ஆலோசனை வெளியீடு- ஐ.சி.எம்.ஆர் - ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

டெல்லி: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு குறித்த திருத்தப்பட்ட ஆலோசனையை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
author img

By

Published : May 24, 2020, 10:51 AM IST

கட்டுப்பாட்டு மண்டலங்கள், கரோனா அல்லாத மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி அளித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, சுகாதார மற்றும் சுகாதார தொழிலாளர்கள் கரோனா பாதிப்பு மற்றும் கரோனா பாதிப்பு அல்லாத பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டை விரிவுபடுத்த முடியும் என்றும் கரோனா பாதிப்பு மற்றும் பாதிப்பு அல்லாத மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள், முன் வரிசை தொழிலாளர்கள, காவல் துறை, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணிபுரியும் பாதுகாப்புப் படையினர் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பு உள்ளவர்களின் வீட்டுடன் தொடர்பு இருக்கும் உறவினர்களுக்கு வழங்க வேண்டும் என தற்போது கூறியுள்ளது.

மேலும், கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மருந்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் பரிந்துரைப்படி மட்டுமே மருந்தானது கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துகள் ஏலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.