ETV Bharat / bharat

கோவிட் - 19 உயிரிழப்பு குறித்து பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

கரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யும்போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

covid
covid
author img

By

Published : May 12, 2020, 9:02 PM IST

நிமோனியா, இதய நோய், ரத்த உறைதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டு ஒருவர் உயிரிழந்திருந்தால், கரோனா வைரஸ் நோய் காரணமாக இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக மருத்துவர்கள் பதிவு செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. பொது சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பெருந்தொற்று காலத்தில் நிகழும் உயிரிழப்புகளை முறையாக பதிவு செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கோவிட் - 19 ஒரு புது விதமான நோய். இதனால் பல நாடுகளில் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது சுகாதாரத்தில் கரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து பதிவு செய்ய வலுவான தரவுகள் தேவை. உயிரிழப்பு குறித்த அடிப்படை காரணிகள் மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தவில்லை என்றபோதிலும் இந்த உயிரிழப்பு கரோனாவால் நிகழ்ந்திருக்கலாம் என பதிவு செய்ய வேண்டும்.

கரோனா அறிகுறிகள் தென்பட்ட ஒருவர் உயிரிழந்து அவரது மருத்துவ பரிசோதனை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், அந்த மரணத்தை சந்தேகத்திற்குரிய கரோனா மரணம் என பதிவு செய்ய வேண்டும். கரோனா அறிகுறிகள் தென்பட்டு மருத்துவ பரிசோதனையில் அவர் நோயால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியானால், தொற்றுநோயியல் கண்டறியப்பட்ட கோவிட் - 19 என குறிப்பிட வேண்டும். மக்களை பாதுகாக்க மாவட்ட, மாநில அளவிலான தரவுகள் தேவை.

நோயின் தீவிரம், நோயாளிகளின் வயது ஆகியவற்றை பொறுத்து மரணம் வகைப்படுத்தப்படுகிறது. தேவைக்கேற்ப சுகாதார அமைப்பை தயார்படுத்துவதற்கு மக்களை பாதிக்கும் சுகாதார நிலைகள் குறித்து கண்காணிக்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, புற்றுநோய், நீரிழிவு நோய் ஆகியவற்றாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம். இம்மாதிரியான நிலைகள் சுவாசக் கோளாறு பிரச்னைகளை அதிகரிக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோயால் இதுவரை 67 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் காரணமாக 2 ஆயிரத்து 206 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 97 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.