கரோனா வைரஸ் நோயால் இந்தியா ஆட்டம் கண்டுள்ளது. இதுவரை 694 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். நோயை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 10 லட்சம் மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது.
இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "ஒப்பந்த ஏலத்துக்கான காலக்கெடு 24 மணி நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, திப்ருகார், சென்னை, ஹைதராபாத், போபால் உள்ளிட்ட நகரங்களில் உள்ள நோய் கண்டறிதல் மையங்களில் இந்த மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும்.
உபகரணத்திற்கான விலையை ஒப்பந்த ஏலத்தில் ஈடுபடும் நிறுவனம் அளிக்க வேண்டும். புனேவில் உள்ள தேசிய நோய் கிருமியியல் ஆய்வகத்திலிருந்து தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் ஒப்பந்த ஏலத்தில் ஈடுபடலாம்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா எனும் மற்றொரு உலகப்போர் - வென்றெடுக்க ஒன்றிணைவோம்!