ETV Bharat / bharat

பிரக்யா சிங் பயங்கரவாதி: ராகுல் காந்தி திட்டவட்டம்

டெல்லி: பிரக்யா சிங் தாகூரை பயங்கரவாதி என தாம் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

I stand by my statement terming Pragya Thakur 'terrorist': Rahul Gandhi

author img

By

Published : Nov 29, 2019, 5:33 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாகூர். அண்மையில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது குறுக்கீட்டு பேசிய பிரக்யா சிங், கோட்சே ஒரு தேசப் பக்தர் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாஜக தலைவர்களும் பிரக்யா சிங் தாகூரின் பொறுப்பற்ற பேச்சை கண்டித்தனர்.

இதைக் கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரக்யா சிங் தாகூரை பயங்கரவாதி என விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பிரக்யா சிங் தாகூர் மன்னிப்பு கோரி விட்டார், நீங்கள் தெரிவித்த கருத்தை திரும்ப பெற்றுக் கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “தாம் கூறிய கருத்தில் உறுதியாக உள்ளேன். இதுதொடர்பாக எந்த விளைவுகளையும் சந்திக்க தயார்” என்று கூறினார். மேலும் கோட்சே ஒரு வன்முறையாளன் என்றும் வன்முறையை விரும்பியவர் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: கட்டளையிட்ட மோடி: மன்னிப்பு கேட்ட பிரக்யா தாக்கூர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.