ETV Bharat / bharat

பொறுப்புமிக்க பத்திரிகைகள் டிஆர்பிக்காக இயங்கக் கூடாது: பிரகாஷ் ஜவடேகர்! - பத்திரிகைகள் பற்றி பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: பொறுப்புமிக்க பத்திரிகைகள் டிஆர்பியால் ஏற்படும் அழுத்தம் காரணமாக பாதிக்கப்படக் கூடாது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

i-and-b-minister-javadekar-slams-trp-driven-journalism

author img

By

Published : Oct 8, 2020, 5:06 AM IST

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டிஆர்பி அல்லது தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிக்காக இயக்கப்படும் பத்திரிகைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ''நாங்கள் சுயக் கட்டுப்பாடு மற்றும் பத்திரிகையின் சுதந்திரத்தை நம்புகிறோம். டிஆர்பி குறித்து பத்திரிகைகளும், மீடியாவும் மீண்டும் ஒருமுறை சிந்தித்துக் கொள்ள வேண்டும். மக்களிடையே பிரபலமடைய இன்னும் நல்ல வழிகள் உள்ளன. டிஆர்பி என்னும் அழுத்தத்தால், பொறுப்புமிக்க பத்திரிகைகள் பாதிக்கக் கூடாது.

தொலைக்காட்சிகளின் ரேட்டிங்களை கண்காணிக்கும் BARC ஏஜென்சி வந்தபோது, பத்திரிகைகள் மற்றும் மீடியாக்கள் ஆகியவற்றில் ஒரு சுயக் கட்டுப்பாடு வரும் என்பதால் வரவேற்றோம். ஆனால் இப்போது இந்த தர ரேட்டிங்களை உருவாக்கியவர்களே புகார் தெரிவிக்கும் வகையில் சூழல் மாறியுள்ளது.

பத்திரிகைகளும், மீடியாக்களும் ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டு, தங்களை திருத்திக் கொண்டு, சிறந்த படைப்புகளோடு மீண்டு வர வேண்டும்.

பிரபலத்தைத் தீர்மானிக்கும் ஒரு அமைப்பிற்கும் பிஎரசனிகளை தூண்டக்கூடிய செய்திகளைக் காட்ட நிர்பந்திக்கப்படும் அமைப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. மத்திய அரசு பத்திரிகைகளையும், அதன் சுதந்திரத்தையும் நம்புகிறது. அதனால் பத்திரிகைகளும், மீடியாக்களும் தங்களுக்குள் ஒரு சுயக் கட்டுப்பாடு நிர்ணயித்து மீண்டும் வர வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க: விமான நிலையங்கள் தனியார்மயம்: ஊழியா்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.