ETV Bharat / bharat

”நாட்டின் பொருளாதாரம்தான் கவலையளிக்கிறது” - ப.சிதம்பரத்தின் அசால்ட் பதில்! - p chidambaram tells about indian economy

டெல்லி: நாட்டின் பொருளாதாரம்தான் கவலையளிக்கிறது என சிறைக்குச் செல்லும் முன் சிதம்பரம் கூறினார்.

ப.சிதம்பரம்
author img

By

Published : Sep 5, 2019, 11:01 PM IST

சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாகக் கூறி ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் மேல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு மறுக்கப்பட்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். சிதம்பரத்திடம் 15 நாட்கள் தொடர் விசாரணை நடத்திய சிபிஐ இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரித்த நீதிபதி, திகார் சிறையில் அடைத்து விசாரணை செய்வதற்கு கொடுக்கப்பட்ட சிபிஐயின் மனுவுக்கு அனுமதியளித்து நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். திகார் சிறைக்குச் செல்லும் முன் சிதம்பரத்திடம், சிறைக்குச் செல்வது கவலையளிக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், “நாட்டின் பொருளாதாரம்தான் கவலை அளிக்கிறது” எனக் கூறினார். திகார் சிறையில் சிறை எண் 9இல் சிதம்பரம் அடைக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்கப் போகும் சிதம்பரம் தனது 74ஆவது பிறந்தநாளில் (செப். 16) சிறையிலேயே இருப்பார்.

Intro:Body:

P Chidambaram on being asked what he has to say after Court sent him to judicial custody: I am only worried about the economy.

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இருந்து திகார் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார் ப.சிதம்பரம் * கைதிகள் அழைத்துச் செல்லப்படும் வாகனத்தில் ப.சிதம்பரம் அழைத்துச் செல்லப்படுகிறார். * திகாரில் 1ம் எண் சிறையில் வார்டு எண் 9ல் சிதம்பரம் அடைக்கப்பட உள்ளதாக தகவல்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை வரும் 19ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (2/2)

சிறைக்கு போவது கவலை அளிக்கிறதா என்ற கேள்விக்கு, நாட்டின் பொருளாதாரம் தான் கவலை அளிக்கிறது என ப.சிதம்பரம் பதில்..

செப்.19ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், செப்.16ம் தேதி தனது 74வது பிறந்தநாளன்று சிறையில் இருப்பார் ப.சிதம்பரம்.. #PChidambaram

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.