ETV Bharat / bharat

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கரோனாவை கட்டுப்படுத்துமா?

டெல்லி: மருத்துவ பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து அவர்களின் உடலில் நல்ல முன்னேற்றத்தை அளித்துள்ளதாக தெலங்கானா அரசு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hydroxychloroquine
Hydroxychloroquine
author img

By

Published : May 21, 2020, 10:01 AM IST

இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலங்கானா மாநிலத்தில் பணிபுரியும் சுகாதார துறை ஊழியர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோருக்கு சோதனை அடிப்படையில் மலேரியாவினை குணப்படுத்துவதற்காக வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கப்பட்டது. ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டோரிடம் நேரடி தொடர்பில் இருந்தபோதிலும் அவர்களுக்கு நோய் தொற்றின் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. மேலும், கரோனா வைரஸிற்கு எதிரான நோய் எதிர்ப்பு தன்மையும் அதிகரித்திருந்தது தெரியவந்தது.

இந்த 394 சுகாதாரப் பணியாளர்களுக்கு வெவ்வேறு நேரங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதற்காக 694 சுகாதாரப் பணியாளர்களின் மாதிரி தொகுப்பு தேர்வு செய்யப்பட்டு, அவை பரிசோதிக்கப்பட்டதாக செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியின் மருத்துவத் தலைவர் விமலா தாமஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று இந்த மாதிரி தொகுப்பின் ஒரு விழுக்காடு ஹைட்ராக்ஸி குளோரோகுயினின் செயல்திறன் ஆய்வு மற்றொன்று சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளின் (PPEகள்) திறன் ஆய்வு.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ப்ரோபிலாக்ஸிஸை எடுத்துக்கொண்ட 533 சுகாதார பணியாளர்களில் 394 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ளும்போதெல்லாம் அனைவரும் பரிந்துரைக்கப்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளைப் பயன்படுத்தி இருந்தனர். அவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி மற்றும் இருமல் போன்ற எந்தவொரு குறிப்பிட்ட கரோனா தொற்றுக்கான அறிகுறிகளும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஈடுபட்ட 394 பணியாளர்களில், 73 பேர் தேர்தெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். இதில், யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை வழக்கமாக உட்கொண்டு வந்தவர்கள்.

இந்த முடிவினை ஒரு இடைக்கால அறிக்கையாகக் கருத வேண்டும். அதிலிருந்து எந்தவொரு உறுதியான முடிவுகளும் எடுக்கப்படக்கூடாது” என்று கூறியுள்ளது.

இதையும் பார்க்க: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், அதிசயமா! ஆபத்தா? ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.