ETV Bharat / bharat

மது அடிமையில் சிக்கித் தவித்த மக்கள்... இலவசமாக சரக்கு அளித்த ஹைதராபாத் இளைஞர்! - Hyderabad resident distributed alcohol pegs among the people

ஹைதராபாத்: மது இல்லாமல் சாலையில் தவிக்கும் மக்களுக்கு தெலங்கானா இளைஞர் இலவசமாக ஒரு கப் மதுபானம் வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

்ே்
்ே்ே
author img

By

Published : Apr 13, 2020, 1:15 PM IST

Updated : Apr 13, 2020, 1:47 PM IST

கரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளதால், பலரும் மது இல்லாமல் தவித்துவருகின்றனர். பல மாநிலங்களில் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று சாலையில் உள்ள மக்களுக்கு இலவசமாக ஒரு கப் மதுபானம் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " நான் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். அப்போது, ஒரு பெண் ஆல்கஹால் இல்லாத விரக்தியில் மன உளைச்சலுக்கு ஆளாகி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். பின்னர் அவரின் நிலைமை மோசமாகக் காணப்பட்டதால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி!

இச்சம்பவம் எனது மனதை மிகவும் பாதித்தது. நான் வீட்டில் ஒரு மதுபானம் பாட்டில் வைத்திருந்தேன். அதைத்தான், சாலையில் மதுபானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படும் மக்களுக்கு ஒரு கப் வழங்கினேன். எனது நோக்கம் அரசாங்க விதிமுறைகளை மீறுவது அல்ல, மக்களுக்கு உதவுவது மட்டுமே" என்றார். தற்போது, இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் கள்ளச்சாராயம்... ரெய்டு சென்ற காவலரின் விரலைத் துண்டித்த தம்பதி!

Last Updated : Apr 13, 2020, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.