ஹைதராபாத், காந்தி நகர் காவல் நிலைய காவலர் நிம்மலா நரேஷ் (எண் 30166), காவல்துறை உதவி ஆய்வாளர் மெல்லச்செரு லக்ஷ்மிநாராயணன், காந்தி நகர் காவல் நிலையத்திற்கு அருகில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்களிடம் பிடிபட்டனர். ஹப்சிகுடாவில் வசிக்கும் எம்.சந்தோஷ் ரெட்டி என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புகார்தாரருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்வதைத் தவிர்க்கவும், விசாரணையிலிருந்து தப்பிக்கொள்ள உதவுவதற்காகவும் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் பெறப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட காவல் அலுவலர்கள் கைது செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.