புதுச்சேரி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் தரப்பில் புதுச்சேரி அண்ணாசாலை அருகே உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது.
முதலமைச்சர் பங்கேற்பு
இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டிலும் போராட்டம்
அதேபோல தமிழ்நாட்டிலும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவு: திமுக தலைமையில் பட்டினிப் போராட்டம்!