மக்களவையில் ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று அணை பாதுகாப்பு மசோதா 2019ஐ தாக்கல் செய்ய முன்வந்தார். இந்த மசோதாவைத் தாக்கல் செய்யக்கூடாது எனக் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தன.
இந்த மசோதா, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் என்ற அமைப்பு அமைக்கப்படும். இந்த ஆணையம் அணை பாதுகாப்பு குறித்த கொள்கை முடிவுகள், வரைவுகள், தரங்களை வடிவமைக்கும். மேலும், மாநில அரசுகள் கட்டும் அணைகளை ஆய்வு மேற்கொள்ள மாநில அரசுகள் சார்பிலான ஆணையமும், இரு மாநிலங்களுக்கான அணை விவகாரம் குறித்த விவகாரங்களை தீர்க்க தேசிய அளவிலான ஆணையமும் உருவாக்கப்படும் என்கிறது .
நாட்டின் 92 விழுக்காடு அணைகள் இரு மாநிலங்களுக்கிடையே இருப்பதால் இந்த மசோதா முக்கியத்துவம் வாய்ந்தது என மசோதாவை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். ஆனால், மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்த்துவருகின்றன.