கோவிட்-19 பூட்டுதல் (லாக்டவுன்) என்பது அனைவருக்கும் கடினமான நேரம். அதிலும் குழந்தைகள், முதியவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், ஏழைகள், தினக் கூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச்சாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு மிகவும் சவாலானது. அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும் சுகாதாரப் பணியாளர்கள் அதிக அளவு மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் அனுபவிக்கின்றனர். சீனாவில் நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, “சுகாதாரப் பணியாளர்கள் பெருமளவு மன உளைச்சலை அனுபவிக்கிறார்கள்” என்று கூறுகிறது.
அதாவது கிட்டத்தட்ட 70 விழுக்காட்டுக்கும் அதிகமாக அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஏனெனில் அவர்கள் நோயாளிகளை கவனித்துக் கொள்கிறார்கள்.
பொதுவாக மனச்சோர்வு, பதற்றம், பீதி, எதிர்காலத்தைப் பற்றிய பயம், நம்பிக்கையற்ற தன்மை, உதவியற்ற நிலை, முன்பே இருக்கும் சுகாதார நிலைமைகள் மோசமடைதல், சமூக விலகல், சரியான நேரத்தில் சாப்பிடாதிருத்தல், இரவில் தூங்க இயலாமை போன்றவை மோசமான மன ஆரோக்கியத்தின் அறிகுறிகளாகும்.
மிகவும் பாதிக்கப்படக்கூடிய, நிச்சயமற்ற தன்மை, போதுமான சமூக பாதுகாப்பு அமைப்புகள் இல்லாதது, சுகாதாரப் பணியாளர்களின் மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யலாம். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, “சாதகமற்ற சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் சூழ்நிலை பாதிப்பு காரணமாக பல்வேறு மக்கள் மனநலப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்”.
ஆகையால் பாதிக்கப்படக்கூடிய மக்களை குறிவைக்கும் வளர்ச்சி திட்டங்கள், மனநல மேம்பாடு மற்றும் பாதுகாப்பு அவசியம். மருத்துவத் துறைகளில் உள்ள முதலாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஆகியவைகளை உறுதி செய்வது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும். இதனால் மனநல பாதகமான விளைவுகள் தடுக்கப்படுகிறது.
மேலும் முதலாளிகள் ஊழியர்களிடம் அதிக பரிவுணர்வுடன் இருத்தல் வேண்டும். அதுவும் பூட்டுதல் (லாக் டவுன்) போன்ற நெருக்கடி காலத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பது முற்றிலும் அவசியம். குழந்தைகள், வயதானவர்களை கனிவுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நெருக்கடிக் காலத்தில் உதவி கிடைக்கிறது என்ற செய்தி மக்களுக்கு சென்றடைய வேண்டும். உடல் தூரத்தை பராமரிப்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒரு குடிமகனாக இந்த கடினமான நேரத்தில் வீட்டிலேயே தங்கி ஒருவருக்கொருவர் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பது நமது பொறுப்பு.
அதே நேரம் நமது செயல்பாடுகள் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களையும், கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றினால் தாக்கப்பட்டவர்களையும் பாதிக்கக்கூடாது. அவர்களை கோவிட்-19 தொற்று நோயாளிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் என்று அழைக்க வேண்டாம்.
வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வசிக்கும் நபர்கள் அந்த குடும்பங்களிடம் இரக்கமுள்ளவர்களாக இருங்கள். தொற்றுநோய் பயம் காரணமாக அவர்களிடத்தில் பாகுபாடு காட்ட வேண்டாம்.
பூட்டுதலின் போது நமக்கும், மற்றவர்களுக்கும் ஆதரவளிக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிய நடைமுறைகளை பின்பற்றலாம்.
- இணைந்திருங்கள்
வீட்டிலேயே இருங்கள், மொபைல் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைந்திருங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் நம்பும் நபர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரிக்க மறக்காதீர்கள்.
- விலகி இருங்கள்
கோவிட்-19 செய்திகளை தொடர்ந்து கேட்பது வருத்தமளிக்கும். ஆகவே செய்தி மற்றும் சமூக ஊடகங்களுக்கு சற்று இடைவெளி கொடுக்கலாம். இறப்பு எண்ணிக்கையை விட கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டவர்களின் செய்திகளைப் பாருங்கள்.
- நடைமுறைகளில் ஒட்டிக்கொள்க
உங்கள் அன்றாட வழக்கத்தை உங்களால் முடிந்தவரை கடைப்பிடியுங்கள். சரியான நேரத்தில் சாப்பிட்டு தூங்குங்கள். நீங்கள் அனுபவிக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், வேலையுடன் வேறு அட்டவணையையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். அந்த வேலை அட்டவணையில் ஒட்டிக் கொள்ளுங்கள்.
- ஆரோக்கியமாக இருங்கள்
வீட்டில் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், சுவாசப் பயிற்சிகள் அல்லது தியானம் செய்ய நேரம் ஒதுக்குங்கள். ஆரோக்கியமாக சாப்பிடுங்கள், ஆல்கஹால் மற்றும் புகையிலை தவிர்க்கவும்.
- சமூக சேவை
மக்களுக்கு சேவையாற்றுதல், தேவைப்படும் போது சிறிய தயவு மற்றும் உதவி ஆகியவை செய்தல் ஆகியவற்றை தொடருங்கள். அவைகள் உங்கள் ஆதரவைப் பெறும் நபருக்கும், உதவி செய்பவருக்கும் பயனளிக்கும்.
மேலும் வயதானவர்கள் தனியாக தங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம் அல்லது வீட்டு தன்னார்வ குழுக்களில் சேர்க்கலாம்.
- இலக்குகளை அமைக்கவும்
பூட்டுதல் காலத்திற்கு சிறிய தனிப்பட்ட இலக்குகளை அமைத்து, அவற்றை அடைய முயற்சிக்கவும்.
- நன்றியைக் காட்டுங்கள்
ஒவ்வொரு தினத்தின் நிறைவையும் நன்றியுடன் முடியுங்கள், காலையை எழுச்சியுடன் தொடங்குங்கள். வாழ்க்கையில் நீங்கள் நன்றியுள்ள அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கோவிட்-19 வைரஸூக்கு எதிரான போரில் முன்னணியில் நின்று போராடும் அனைத்து சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கும் நன்றி தெரிவியுங்கள்.!
இதையும் படிங்க: முழு அடைப்பின்போது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?