உலகிலுள்ள 185 நாடுகள் கோவிட் -19 வைரஸ் தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக இதுவரை எந்தவொரு நாடும் தீர்க்கமான தீர்வை முன்வைக்கவில்லை.
இதுபோன்ற கணிக்க முடியாத அபாயங்கள் ஏற்படும்போது நாம் செல்லும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, பின்நோக்கி வருவதுதான் சிறந்தது. ஏனென்றால் இதுபோன்ற சிக்கல்களுக்கான தீர்வை, தனித்து எந்தவொரு அமைப்பும் ஆராய முடியாது. எனவே அரசு Multi layered Process எனப்படும் பல அடுக்கு படிநிலைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. உலகளாவில் ஏற்படும் நெருக்கடியின்போது, அரசு எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதே அந்த அரசின் திறனை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
இதை செய்ய மாநிலங்கள், தங்கள் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை பெறவேண்டும். மேலும், அங்குள்ள உள்ளூர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். இது போன்ற சில அமைப்புகள்தான் சமூகத்தில் நிலவும் ஊழல், வீணாகும் நிதி, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த பெருந்தொற்றை எந்தவொரு நாட்டாலும் தனியாக எதிர்கொள்ள முடியாது. ஏனெனில், இது ஒரு நாட்டின் எல்லைக்குள் இருக்கும் சிக்கல் அல்ல எனவே அரசு தங்கள் ஒருங்கிணைப்பை அதிகரிப்பதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
உலக பொருளாதார அமைப்பு கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க உலகெங்கிலும் உள்ள பல்வேறு பங்குதாரர்களின் முயற்சிகளை பெற அணிதிரட்டிவருகிறது.