ETV Bharat / bharat

அஸ்ஸாம் சாலைகளில் கண்டெடுக்கப்படும் பிபிஇ கருவிகள்! - சாலைகளில் கண்டெடுக்கப்படும் பிபிஇ கருவிகள் '

கவுஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் குப்பைத்தொட்டி ஒன்றிலிருந்து சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பிபிஇ கருவிகள், நாட்டில் மருத்துவக் கழிவுகள் அகற்றப்படுவது குறித்த கடுமையான சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கவுஹாத்தியில் சாலைகளில் கண்டெடுக்கப்படும் பிபிஇ கருவிகள்

author img

By

Published : May 18, 2020, 12:27 PM IST

கவுஹாத்தியின் லோக்ரா பகுதியில் குப்பைத்தொட்டி ஒன்றின் உள்ளே மனநலம் பாதிக்கப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், பிபிஇ உடை அணிந்து அமர்ந்திருந்தது குறித்த பிரத்யேக செய்தித் தொகுப்பு, முன்னதாக நமது ஈடிவி பாரத்தில் வெளிவந்தது.

தனிமைப்படுத்தப்பட்ட மையம் ஒன்றின் அருகே அந்தக் குப்பைத்தொட்டி அமைந்திருந்த நிலையில், மேலும் பயன்படுத்தப்பட்ட ஏழு பிபிஇ கருவிகள் குப்பைத் தொட்டிகளில் கிடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்திருந்தனர்.

கடந்த சனிக்கிழமை மேலும் சில பிபிஇ கருவிகள் கவுஹாத்தியின் லக்டோக்கியா என்னும் மற்றொரு பகுதியில் சாலையோரத்தில் வீசப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இது குறித்து உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு பிபிஇ கருவிகள் எரிக்கப்பட்டன.

இந்த பயோமெடிக்கல் கழிவுகளை அகற்றும் பணி, விமானப்படை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடம்தான் வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்நிறுவனம் உயிரியல் மருத்துவக் கழிவுகளை அகற்றும்போது அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றுகிறது என்றும் மெட்ரோ மாவட்ட காவல் துணை ஆணையர் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

கவுஹாத்தியில் சாலைகளில் கண்டெடுக்கப்படும் பிபிஇ கருவிகள்
கவுஹாத்தியில் சாலைகளில் கண்டெடுக்கப்படும் பிபிஇ கருவிகள்

ஆனால் காவல் துறையினரின் இந்த விளக்கம் மக்களைத் திருப்திப்படுத்தாத நிலையில், லோக்ரா பகுதியில் குப்பைத் தொட்டியில் கிடைத்த பிபிஇ கிட்டை மனநலம் குன்றியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் அணிந்தபடி வீதிகளில் சுற்றித் திரிந்தது உள்ளூர்வாசிகளைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க :'கோவிட்-19ஐ வெல்ல உலக நாடுகளை ஒன்றிணைத்து செயல்படுவது அவசியம்' - ட்ரம்ப்புக்கு மோடி பதில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.