ETV Bharat / bharat

தாராவியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கரோனா : எப்படி சாத்தியமானது? - தாராவியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கரோனா

மும்பை : ’கரோனா ஹாட்ஸ்பாட்’ ஆக இருந்த தாராவியில் தற்போது பெருமளவு கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட அடர்ந்த குடியிருப்புப் பகுதியான தாராவியில் இது எப்படி சாத்தியமானது?

Dharavi
Dharavi
author img

By

Published : Jun 16, 2020, 9:07 PM IST

ஆசியாவின் மிகப் பெரிய குடிசை குடியிருப்புப் பகுதியான தாராவியில், இரண்டு மாதங்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டார்.

தமிழர்கள் உட்பட ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்ந்து வரும் இந்த அடர்ந்த குடிசைப் பகுதி, நாட்டிலேயே மிகப் பெரிய ’கரோனா ஹாட்ஸ்பாட்’ ஆக உருவெடுக்கும் என நிபுணர்கள் எச்சரித்தனர், அதே போல், கரோனா எண்ணிக்கை மளமளவென தாராவியில் அதிகத்து வந்த நிலையில், தற்போது அங்கு நோய் பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது.

முன்னர், வாரத்துக்கு 100 முதல் 150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் வெறும் 10 - 15 பேருக்கு தான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

எப்படிச் சாத்தியமானது ?

மும்பை மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாகவே தாராவியில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இங்கு முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே 'மிஷன் தாராவி' என்ற திட்டத்தை செயல்படுத்திய மும்பை மாநகராட்சி, கரோனாவைக் கண்டறியும் வேட்டையில் களமிறங்கியது.

மும்பை மேற்கு கோட்ட துணை ஆணையர் கிரண் திகாவ்கர் கூறுகையில், "மிக நெருக்கமான குடியிருப்புப் பகுதி என்பதால் தாராவியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை. ஆகையால், அங்கு தீவிர பரிசோதனையில் ஈடுபட்டோம். கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினோம்.

ஒவ்வொரு வீடாக சென்று மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். கிருமி நாசினி அடிக்கடி தெளிக்கப்பட்டது. தொற்று ஏற்பட்ட பகுதிகளை சுற்றி இரண்டு கி.மீ வரை தனிமைப்படுத்தப்பட்டது. எனவே தான் மிஷன் தாராவி வெற்றி பெற்றுள்ளது" என்றார்.

மேலும் “கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர 200 மருத்துவர்கள், 300 செவிலியர்கள், 40 பொறியாளர்கள், 300 மாநகராட்சி ஊழியர்கள், மூன்று ஆயிரத்து 600 சுகாதாரப் பணியாளர்கள் இரவு, பகல் பார்க்காமல் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தாராவி மக்களை பரிசோதிக்கும் மருத்துவப் பணியாளர்கள்

தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நோய் அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மையத்தில் படுக்கைகள் அமைப்பது, கிருமி நாசினி தெளிப்பது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உணவு, மளிகை சாமான், மருந்து உள்ளிட்டவற்றை விநியோகம் செய்வது என மாநகராட்சி அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

அரசின் தரவுகளின்படி, தாராவியில் இதுவரை 1.5 லட்சம் மக்களுக்கு முதல் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், இரண்டாயிரத்து 70 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. முன்கூட்டியே பரிசோதனை மேற்கொண்டதன் விளைவாகவே கரோனா தொற்றுப் பரவல் இங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

’மிஷன் தாராவி’ திட்டத்தின் கீழ், இதுவரை அங்கு 82 ஆயிரம் பேர் வீடுகளிலும், தனிமைப்படுத்துதல் மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தாராவியில் நான்காயிரத்து 500 தனிமைப்படுத்துதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாயிரத்து 70 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிட்டத்தட்ட அங்குள்ள ஏழு லட்சம் மக்களின் உடல் வெப்ப நிலை, ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் தாராவியை கரோனா பாதிப்பில்லாத பகுதியாக மாற்றுவதே மும்பை மாநகராட்சியின் ஒரே குறிக்கோள்” எனவும் துணை ஆணையர் திகாவ்கர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை

சட்டப்பேரவை உறுப்பினர் வர்ஷா கைவக்வாட் இது குறித்து கூறுகையில், "தாராவியில் நான்காயிரத்து 500 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்துதல் மையம் செயல்பட்டு வருகிறது. ராஜிவ் காந்தி விளையாட்டு அரங்கில் செயல்பட்டு வரும் இந்த மையத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப் படுகிறார்கள்.

14 நாட்களுக்குப் பிறகு நோய் அறிகுறி இல்லாதவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆகையால் தான் தாராவியில் தற்போது குறைந்த அளவில் நோயாளிகள் உள்ளன" எனத் தெரிவித்தார்.

தாராவியில் வாழ்ந்து வரும் ராஜேஷ் சோல்கர் பேசுகையில், "இது போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்தால் விரைவிலேயே தாராவி கரோனா இல்லா பகுதியாக உருவெடுக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

தவிர, மக்களிடையே இருந்த விழப்புணர்வும் இந்த திட்டத்துக்கு பெரும் உதவியாக இருந்தது என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : அமெரிக்க காவல் துறை சீர்த்திருத்த ஆணையில் இன்று கையெழுத்திடும் ட்ரம்ப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.