கரோனா தொற்றின் தாக்கம் உலக நாடுகளில் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே செல்கிறது. கரோனா தொற்று குறித்து அறிந்துகொள்ள உலகம் முழுவதும் பல்வேறு ஆரயாச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இது குறித்து ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் நரம்பியல் விஞ்ஞானிகள் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில் கரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் தற்காலிக வாசனை நுகரும் திறன் இழப்பு ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் காரணமாக நியூரான்கள் பாதிக்கப்படுவதில்லை என்றும் செல்கள் மட்டுமே பாதிக்கப்படுவதும் அதில் கண்டறிப்பட்டுள்ளது.
அனோஸ்மியா எனப்படும் தற்காலிக வாசனை நுகரும் திறன் இழப்பு கரோனா தொற்றால் ஏற்படும் ஆரம்பகட்ட மற்றும் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். காய்ச்சல், இருமல் போன்ற மற்ற அறிகுறிகளைவிட கரோனாவை கண்டறி இந்த வாசனை திறன் இழப்பு சிறப்பாக பயன்படுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் கரோனா நோயாளிகளுக்கு ஏன் இந்த வாசனை நுகரும் திறன் இழப்பு ஏற்படுகிறது என்பதற்கான தெளிவாக காரணங்கள் ஆராய்ச்சியாளர்களால் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியிலுள்ள பிளேவட்னிக் நிறுவனத்தின் இணை பேராசிரியர் சந்தீப் ராபர்ட் தத்தா இது குறித்துக் கூறுகையில், "கரோனா வைரஸ் நோயாளிகளின் நியூரான்களை நேரடியாக தாக்குவதில்லை. மாறாக உயிரணுக்களின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால்தான் நோயாளிகளுக்கு வாசனை நுகரும் திறன் இழப்பு ஏற்படுகிறது" என்றார்.
அதாவது கரோனாவால் ஏற்படும் இந்த வாசனை நுகரும் திறன் இழப்பு என்பது தற்காலிகமானதுதானே தவிர நிரந்தரமானதில்லை. மேலும், இதனால் மனச்சோர்வு மற்றும் பதற்றம் உள்ளிட்ட உளவியல் சிக்கல்களும் ஏற்படலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேராசிரியர் சந்தீப் ராபர்ட் தத்தா கூறுகையில், "இது ஒரு நல்ல செய்தி என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் கரோனா வைரஸ் அழிந்தவுடன், நியூரான்கள் புதிதாக உருவாக தேவையில்லை. இருப்பினும், இது குறித்த தெளிவான புரிதலை பொற எங்களுக்கு கூடுதல் தரவுகள் தேவைப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவை வென்ற 101 வயது பாட்டி