கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 13,254 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் அதிகம் வாழும் பகுதியில் கரோனா வைரஸ் எளிதாகப் பரவிவிடும்.
இருப்பினும், ஆசியாவின் மிகப்பெரிய குடிசை குடியிருப்புப் பகுதியான தாராவியில் கரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளது. இதற்கு அரசு எடுத்த துரித நடவடிக்கைகளே முக்கியக் காரணம்.
ஒரு நபருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவர் வசிக்கும் பகுதி மக்களிடையே தகுந்த இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டுதல்களை மேற்கொண்டு வைரஸ் பரவலைப் பெருமளவில் குறைத்தது. கரோனா நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தியது.
மருத்துவப் பரிசோதனையை அதிகப்படுத்தி தனியார் மருத்துவமனைகளின் உதவியோடு மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்தியது. இந்த நடவடிக்கைகள்தான் தாராவியில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதற்குக் காரணம்.
இதையும் படிங்க: தாராவியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கரோனா : எப்படி சாத்தியமானது?