ETV Bharat / bharat

தனியார் மயமாக்கலும், அந்நிய நேரடி முதலீடும், நாட்டை தற்சார்புள்ள தேசமாக கட்டியெழுப்புமா? சிறப்புக் கட்டுரை - அந்நிய நேரடி முதலீடு

நாட்டில் தனியார்மயமாக்கல், அந்நிய நேரடி முதலீடு ஆகியவை தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது தொடர்பாக ரமோன் மக்சேசே விருது பெற்ற கல்வியாளரும், சமூக செயற்பாட்டாளருமான சந்தீப் பாண்டே எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

Modi
Modi
author img

By

Published : Jul 3, 2020, 12:52 PM IST

காந்தியமும் தற்சார்பும்

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கையின்படி எளிமையான வாழ்க்கையும் தன்னிறைவும் தான் தற்சார்பு என்பதற்கான இலக்கணம். எனவே சுய சார்பு என்பது வெளிநாடுகளைச் சாராதிருத்தல் என்பது மட்டுமல்ல, அதன் அடிப்படைக் கொள்கை உள்நாட்டு வளங்களை, இங்குள்ள உழைப்பாளரைக் கொண்டு உள்நாட்டு பயன்பாட்டுக்கென கூடுமானவரை பொருள்களை உற்பத்தி செய்துகொள்வதே ஆகும்.

மேலும், நம் தேவைகளுக்கான அந்நிய சார்பு மிகக் குறைவானதாகவே இருக்கவேண்டும். இதற்கு மாறாக, இந்திய அரசின் பிரமாண்ட அறிவிப்பான ’தற்சார்பு பாரதம்’ (Atmanirbhar Bharat) என்பது எளிமையான வாழ்க்கையை நோக்கியதாகவோ – குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வசதி படைத்தோர் மத்தியில் – அல்லது உள்நாட்டு சுய சார்பினை உறுதிசெய்வதாகவோ இல்லை.

கரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டி, இந்தியாவில்தான் உலகிலேயே மிகப் பெரிய, தீவிரமான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு அறிவித்துள்ள திட்டங்களும் நிவாரண நடவடிக்கைகளும், காந்திய தற்சார்புக் கொள்கைகளில் இருந்து நம்மை வெகு தூரம் அந்நியப்படுத்துவதாக உள்ளன.

கரோனா: பொது சுகாதாரத் துறையும் தனியார் துறையும்

கடந்த இரு மாதங்களில், கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் எந்த அளவு நமது பொது சுகாதாரமும் பொருளாதாரமும் பின்னிப் பிணைந்துள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவத் துறையில், பொது சுகாதாரத் துறையைவிட அதிகப்படியான வெண்ட்டிலேட்டர்கள், மருத்துவர்கள், மருத்துவமனைப் படுக்கைகள் இருந்த போதும், இந்த நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் முன்னணியில் உள்ளது நமது பொது சுகாதாரத் துறையே.

மேலும், கட்டுக்குள் அடங்காது பரவி வரும் நோய்த்தொற்றின் தாக்கத்தினை பொது சுகாதாரத் துறையே பெருமளவு எதிர்கொள்கிறது. இத்தனைக்கும், பொது சுகாதாரத்துறையானது போதிய நிதி ஒதுக்கீடோ, போதிய மருத்துவ பணியாளர்களோ இன்றி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

மாறாக, தனியார் மருத்துவத் துறை, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இருந்து விலகி ’பாதுகாப்பாக’ இருக்கிறது அல்லது இந்த மனிதப் பேரவலத்திலும் கொள்ளை இலாபம் ஈட்டுவதில் தீவிரமாக இருக்கிறது.

இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள, குறுகிய கால நடவடிக்கையாக இல்லாமல் நீண்டகால திட்டமிடுதலாக நமது பொருளாதார மற்றும் சுகாதார அடித்தளத்தில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும்.

நாட்டின் செல்வம் மற்றும் வளங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வண்ணம், அவர்களுக்கு மரியாதையுடன் பாதுகாப்பான வாழ்வை உறுதிசெய்யும் பொருளாதார அமைப்பை உருவாக்கவேண்டியது அவசியம்.

இது மக்களின் உரிமை என்பதை ஏற்று, கடுமையான சூழலிலும் நடைமுறைப்படுத்த தவறக்கூடாது. இதனைக் கருத்தில் கொண்டு, எந்தவித வேறுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையிலான மருத்துவ கட்டமைப்பை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொள்ளுதல் இன்றியமையாததாகும்.

சமூக பொருளாதார அந்தஸ்து என பாகுபாடு இன்றி எல்லோருக்கும் மருத்துவ வசதி என்பதே நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டும் நடைமுறைக்கு வர புதிய தாராளாவாத பொருளாதார கொள்கைகளைக் கைவிட வேண்டும்.

மனித குலத்தின் எதிகாலமே கேள்விக்குறியாக உள்ள சூழலிலும் மக்களை காட்டிலும் இலாபத்தை முன்னிறுத்தும் முதலாளித்துவ சிந்தனையை அடியொற்றிய இந்த புதிய தாராளவாதம் தூக்கி எறியப்பட வேண்டும்.

எண்ணமும் செயலும்: தனியார் துறைக்கு முன்னுரிமை

ஆனால், நாம் எதிர்கொள்ளும் முரன்பாடு என்னவென்றால், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மத்திய அரசின் திட்டங்களின் ஒரு முக்கிய பகுதியாக மருத்துவமனை மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட சமூக கட்டமைப்பில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க எட்டு ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தனியார் துறை முதலீட்டுக்குப் பொதுத்துறை நிறுவனங்களின் கதவுகள் முன்னெப்போதும் இல்லத அளவு தாராளமாக திறக்கப்பட்டுள்ளன. விண்வெளி ஆய்வு, இராணுவ தளவாடங்கள் உற்பத்தி, மின்சாரம், நிலக்கரி மற்றும் இதர சுரங்கம் ஆகிய துறைகளில் தனியார் முதலீட்டுக்கு இனி தடையில்லை.

உலகின் மிகப்பெரிய இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனமான இந்திய அரசின் தளவாட தொழிற்சாலையை பெருநிறுவனமாக மாற்றும் முடிவை, பொருளாதார மீட்சி செயல்திட்ட அறிவிப்புடன் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், சென்ற ஆண்டு நடைபெற்ற தளவாட தொழிற்சாலைப் பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் தொழிற்சாலையை தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவு ஒத்திப் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுதான் இவ்வாறென்றால், மாநில அரசுகளின் நடவடிக்கைகள் இன்னும் மோசம். ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவில் இருந்து மீள, முதலீடுகளை ஈர்க்கும் பெரும் நம்பிக்கையில், பல மாநில அரசுகள் தொழிலாளர் உரிமைகளை முடக்கியுள்ளன. மருத்துவ வசதிகளை மேம்படுத்திப் பரவலாக்க, மாநில அரசுகள் தனியாருடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகளையும், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளைப் பெருக்கவும் விரைந்து செயல்பட நித்தி ஆயோக் கேட்டுக்கொண்டுள்ளது. மாவட்ட மருத்துவ மனைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த திட்டம் கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என சில மாதங்களுக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டபோதே விமர்சனத்துக்குள்ளானது.

பொதுத்துறை மருத்துவமனைகளை தனியார் மயமாக்கும் நிதி ஆயோக் பரிந்துரைக்கு கண்டணம் தெரிவித்துள்ள முன்னாள் சுகாதாரத்துறை செயலர் கே சுஜாதா ராவ், இதுதான் ’தற்சார்பு பாரதம்’ கொள்கையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளை நமது வரிப் பணத்துடன் தனியாருக்கு தூக்கிக் கொடுப்பதுதான் தீர்வா என வினா எழுப்பியுள்ள அவர், அதிகாரத்தில் இருந்து கொள்கை முடிவு எடுப்பவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும், தங்கள் ஜன்னலுக்கு வெளியேயும் பார்க்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

தற்சார்பு பாரதம்: நோக்கம் நன்று, பாதை தவறு

இவ்வாறான ஒட்டுமொத்த முட்டாள்தனத்துடன் சேர்ந்தாற்போல், இந்தப் பொருளாதார மீட்சி திட்டத்தை தனது ’தற்சார்பு பாரத’ நடவடிக்கையின் ஒரு பகுதி என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

இராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டை தற்போதுள்ள 49 விழுக்காட்டில் இருந்து 74 விழுக்காடு ஆக உயர்த்துவது எந்த விதத்தில் சுய சார்பையும் தன்னிறைவையும் தரும்? பிரதமருடைய கற்பனையின் எல்லை தான் என்ன என்பது நமக்குப் புரியவில்லை.

தற்போது நாம் எதிர்கொண்டுள்ள மாபெரும் நெருக்கடியில் இருந்து இந்த அரசு எந்த ஒரு பாடமும் கற்றுக் கொள்ளவில்லை, அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, எல்லாம் நலமே வழக்கம் போல வியாபாரம் எனற போக்கில் செல்கிறது. ஆனால், இந்த நெருக்கடியை தனக்கு சாதமாகப் பயன்படுத்தி, புதிய தாராளமய பொருளாதார செயல் திட்டத்தைத் திணிக்க, முதலாளித்துவ சக்திகளின் முழுமையான ஆதரவுடன் அரசு செயல்படுவதாகத் தோன்றுகிறது. நாட்டில் சகஜ நிலை நிலவும் போது கூட இது அவ்வளவு சாதியமில்லை.

அந்நிய நேரடி முதலீடு: அயல் நாட்டுப் பிடியில் இந்தியா

அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்பது, தனியார் மயம், உலகமயம் மற்றும் தாராளமயமாகிய பொருளாதார கொள்கைகளின் முக்கியமான அம்சமாகும். உலகையே அச்சுறுத்திவரும் கரோனா பெருந்தொற்றின் பரவலுக்கு இக்கொள்கைகள் நேரடியான காரணமாக இல்லை என்றாலும், அதனைக் கட்டுப்படுத்துவதில் பல நாடுகளுக்கு இருந்த அலட்சியத்திற்கும், அவை மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளுக்கும் இதுவே அடிப்படையான காரணம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள், குடும்பம் குடும்பமாக மூட்டை முடிச்சுகளுடன் கால் நடையாக நெடுஞ்சாலையிலும், ரயில் பாதையிலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணித்தது இதற்கு மிக சரியான உதாரணம் ஆகும்.

ஊரடங்கினால் நகர்ப்புறங்களில் இருந்து அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதை தடுக்க தனியார் தொழில்துறையினர் அரசுக்கு கொடுத்த அழுத்தம் தான் புலம் பெயர் தொழிலாளரின் அவல நிலைக்குக் காரனம்.

கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள இன்றைய நெருக்கடி, நாம் எதிர்கொண்டுள்ள கசப்பான உண்மைகளை நமது முகத்தில் அறைந்தாற்போல வெளிக்கொண்டுவந்துள்ளது. இப்படி மனிதத்தன்மை கிஞ்சித்தும் அற்ற இந்த கருத்தியல் கைக்கொண்டுள்ள செல்வாக்கும், அது செலுத்திவரும் அதிகாரமும் அணைவருக்குமான எச்சரிக்கை மணியாகும்.

வழமையான தாராளமய கொள்கைகளும், அந்நிய நேரடி முதலீடுகளும் எவ்வாறு சுய சார்பை நோக்கிய நமது பயனத்திற்கு எதிரானதாக செயல்பட்டு குந்தகம் விளைவிக்கின்றன என்பதை இன்றைய சூழலில் தெளிவாக விளக்க மருத்துவ உபகரண உற்பத்தித் துறையை எடுத்துக் கொள்ளலாம்.

தற்சார்பு தகர்க்கப்பட்டு கானல் நீரானதும் விளங்கும். 2015 ஆம் ஆண்டிலிருந்தே மருத்துவ உபகணங்கள் உற்பத்தித் துறையில் 100 விழுக்காடு அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடந்ததுஎன்ன? நாம் பெற்ற அந்நிய முதலீடுகளில் பெரும்பான்மையானவை இறக்குமதி மற்றும் வர்த்தகத்திற்கான நிதியாகவும், இறக்குமதியான பொருள்களைப் பாதுகாக்க நவீன கிடங்குகள் மற்றும் விற்பனை செய்ய பகிர்மான கட்டமைப்புகளை உருவாக்கவுமே பயன்பட்டுள்ளன.

உள்நாட்டு உற்பத்தித் திறனை மேம்படுத்துவதிலோ தரம் உயர்த்துவதிலோ சிறிதளவும், பங்காற்றவில்லை. இது ஏதோ தெரியாமல் நடைபெறுவதல்ல. உள்நாட்டு உற்பத்தி சவலப்பிள்ளையாக இருக்க, பன்னாட்டு மருத்துவ உபகரண உற்பத்தியாளர்களுக்கு, இந்தியா அவர்களது கருவிகளுக்கான சந்தை மட்டுமே. நமது தொழில் வளர்ச்சிக்கோ, தொழில்நுட்ப வளர்ச்சிக்கோ எந்த ஒரு பங்களிப்பும் செயாமல், கொள்ளை இலாபம் ஈட்டின வெளிநாட்டு மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள்.

இறக்குமதி சார்ந்த மருத்துவத் துறை

இன்றைக்கும், அரசு மருத்துவ மனைகள் உட்பட நமது நாட்டில் பய்ன்படுத்தப்படும் 80 விழுக்காடு மருத்துவ கருவிகள் இறக்குமதி செய்யப்படுபவையே. ஒரு சில எலெக்ட்ரானிக் அல்லாத மருத்துவ கருவிகள் தயாரிக்கும் திறனை மட்டுமே இந்தியா பெற்றிருப்பதால், 90 விழுக்காடு மருத்துவ எலக்ட்ரானிக் கருவிகளுக்கு நாம் இறக்குமதியையே நம்பி இருக்கிறோம்.

அறுவை சிகிச்சைக்கான கத்தரி, கத்தி போன்றவை முதல், சி.டி ஸ்கேன், எம்ஆர்ஐ, அல்ட்ராசவுண்டு ஸ்கேன், ஆஞ்சியோ, எண்டோஸ்கோப்பி, கொலோனோஸ்கோப்பி, கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய இதய சிகிச்சைக்கான கேத் லேப் மற்றும் கெமோதெரப்பிக்கான மாத்திரைகள் ஆகியவை ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகின்றன.

இதில் கொடுமை என்னவென்றால், இறக்குமதி செய்யப்படும் மருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்களுக்கான சுங்க வரி மிகவும் குறைவாக உள்ளது (0-7.5%). மேலும், வெளி நாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் மருத்துவ மின்னணு சாதனங்களில் 40 விழுக்காடு முன்பே பயன்படுத்தப்பட்டவை ஆகும் (அவ்விதாமான கருவிகள் புதுப்பிக்கப்பட்டு சந்தை விகிதத்தை விட மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன).

அரசாங்கம் கொள்முதல் செய்வதில், பல சிறு-குறு தொழில் நிறுவனக்களுக்கு (MSME) உரிய காலக் கெடுவுக்குள் சரியான நேரத்தில் பணம் வழங்கப்படுவதில்லை என்றும், பல மாதங்கள் தாமதமாகி வருவது வழமையான நடைமுறையாக இருக்கிறது.

இது குறித்து செய்திகள் அவ்வப்போது வருகின்றன. ஆனால், இறக்குமதியாளர்களுக்கு தாமதமின்றி விரைவாக பணம் வழங்கப்படுகிறது. இந்த வர்த்தகக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களை விட இந்தியாவுக்கு மருத்துவக் கருவிகள் உபகரணக்களை ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் சாதகமாக அமைந்துள்ளன.

இறக்குமதியையே நம்பியிருக்கும் இந்த நிலைமை இன்றளவும் தொடர்வதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருத்துவ உபகரணங்கள் பெரும்பாலும் தரம் குறைந்தவையாக இருப்பதுதான்.

இந்திய உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் மீதான நம்பகத்தன்மை இல்லாதிருப்பின் காரணமாகவே, மருத்துவர்கள் வெளிநாட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட சாதனங்களையே விரும்புகிறார்கள். ஆனால், தற்சார்பு என்ற தத்துவத்தையே கேலிக்கூத்து ஆக்கும் அரசின் நடைமுறை தொடர்வது வேதனையே.

சில சமயம், மருத்துவக் கருவிகள் வாங்க அரசாங்கம் டெண்டெர்கள் கோரும்போது, அவற்றில் உள்ள விதிமுறைகள் இந்திய நிறுவனங்களை விண்ணப்பிக்க கூட தகுதியற்றவையாக ஆக்குகின்றன.

இந்திய மருத்துவக் கருவி தயாரிப்புத் துறையின் நிலை

இந்த நிலைமையை சீராக்க வேண்டி, இந்திய மருத்துவக் கருவிகள் உற்பத்தியாளர் சங்கம் போன்ற மருத்துவ சாதன தயாரிப்பு நிறுவனத்தினரின் கூட்டமைப்புகள் இறக்குமதிக்கான சுங்க வரிகளை அதிகரிக்க வேண்டும், பயன்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கருவிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களுக்கு சகாய விலை மற்றும் முன்னுரிமை விலை அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களின் தர நிர்ணயம் மற்றும் அடக்க விலைக்கான (எம்ஆர்பி) கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், தரத்தை உயர்த்தவும் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் எந்தப் பயனும் இல்லை. காரணம், இறக்குமதியாளர்களின் லாபிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கைகொடுக்கும் வகையிலான எந்தவொரு கொள்கை மாற்றத்தையும் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.

வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துமே தரம் உயர்ந்தவை அல்ல. இதனை அண்மையில், கரோனா தொற்றைக் கண்டறிய சீனாவிலிருந்து தாயாரிக்கப்பட்ட தரமற்ற விரைவான இரத்த மாதிரி சோதனைக் கருவிகள் நமக்கு தெளிவாகக் காட்டியுள்ளது.

மேலும், அயல் நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்குத் தரக் கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை நடைமுறைப்படுத்துவது மிகக் கடினமான ஒன்று. மேற்கூறியவற்றை வைத்துப் பார்க்கையில், சர்வதேச தரத்திற்கு சற்றும் குறையாத வகையில் மருத்துவக் கருவிகளையும் சாதனங்களையும் இந்தியாவில் ஏன் தயாரிக்க முடியாது? முயன்றால் முடியும்.

உண்மையான தற்சார்பு

மருத்துவ சாதனங்களின் உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரே வழி, உள்நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பை தொடர்ந்து ஊக்குவிப்பதாகும். குறிப்பாக மருத்துவ ஆய்வுத்துறையைப் பொறுத்தவரையில், உள்நாட்டு ஆராய்ச்சி இன்றியமையாதது.

ஏனென்றால் பொது சுகாதாரத் துறையில் உள்ளூர் சூழலுக்கு ஏற்றவாறும் உள்ளூர் மக்கள் எதிர்கொள்ளும் நோய்கள் தொடர்பான அனைத்திற்க்கும் பொருத்தமான மருத்துவ தொழில்நுட்பங்களை உருவாக்க இது பேருதவியாக அமையும்.

ஆனால், தற்போது இந்தியாவில் அரசு ஆதரவு இன்றி மருத்துவ ஆராய்ச்சி கடுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது கசப்பான உண்மை. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் கடைக்கோடியில் இருக்கிறோம் என்பது வேதனையான ஒன்று.

உதாரணமாக, 579 இந்திய மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை எடுத்துக்கொண்டு அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 2005 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 25 (4.3%) நிறுவனங்கள் மட்டுமே ஆண்டுக்கு 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

உலகத் தரம் வாய்ந்த புகழ்மிக்க பன்னாட்டு நிறுவனங்களான அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம், சீன அறிவியல் கழகம் போன்றவை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளுடன் ஒப்பிட்டால், இது எவ்வளவு சொற்பம் என்பது தெளிவாகப் புரியும்.

நமது பொதுத்துறை மற்றும் அரசு சார் ஆராய்ச்சி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இந்திய மருத்துவ சாதனங்கள் உற்பத்தித் துறையின் இன்றைய நிலைமை நமக்கு தெளிவாக உணர்த்துவது இதுதான். அந்நிய நேரடி முதலீடு ஒருபோதும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான சரியான வழிமுறை இல்லை.

நமது மருத்துவக் கருவிகள் தயாரிப்புத் துறை சவலப்பிள்ளையாகவே இருப்பதற்கு முழு முதற்காரணம் அந்நிய நேரடி முதலீடுதான். தற்போது, ’தற்சார்பு பாரதம்’, என்னும் மத்திய அரசின் புதிய தாரக மந்திரம், இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணங்களில் முக்கியமானதாக இறக்குமதியை பெருமளவில் நாம் சார்ந்திருப்பதை சரியாக கண்டறிந்துள்ளது.

அயல் நாட்டுச் சார்பு காரணமாக, நமது பொருளாதாரம் வலுவற்றதாகவும் சமத்துவமற்றதாகவும் உள்ளது. ஆனால், தற்போது அரசு முன்வைத்துள்ள திட்டங்கள், நாம் எதிர்கொண்டுள்ள அடிப்படையான சிக்கல்களுக்குத் தீர்வாக அமைவதற்கு மாறாக, பிரச்சனையை மிக மோசமான நிலைக்கு இட்டுச்சென்று மேலும் தீவிரமாக்கும் என்பதே நிதர்சனம். நாடு தற்சார்பு அடைய தேவையான கொள்கை மாற்றங்களை மேற்கொள்வது அவசியம்.

பன்னாட்டு நிறுவனங்களின் வணிக நலனைப் புறந்தள்ளி, மக்களை மையப்படுத்திய கொள்கை மாற்றமாக இருக்கவேண்டும். மேலும், வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தி உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நடைமுறையும் பொதுத்துறை ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கமும் அளிக்கும் கொள்கை மாற்றமுமே இப்போதைய தேவை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.