ஹைதராபாத்தில் உள்ள ஒரு பாலத்தில் வேகமாக பயணித்த கார் விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
பலியானவரின் பெயர் முகமது சோஹல் என்றும் அவர் ஒரு ஹோட்டல் தொழிலாளி என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த பேசிய காவல் ஆய்வாளர் சந்திரசேகர் முகமது சோஹல், காரை ஓட்டவில்லை என்றும், அவர் கார் ஓட்டுநர் அருகே அமர்ந்திருந்தார் என்றும் தெரிவித்தார். மேலும் அதிக வேகமாக பாலத்தில் கார் சென்றதால் அது நிலைத்தடுமாறி விழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
சமீப காலத்தில் பாலத்தில் நடந்த விபத்துகளில் இது இரண்டாவது விபத்து என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலத்திலிருந்து கார் கீழே விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார்.
இதையும் படிங்க:தெலங்கானா எம்எல்ஏ சகோதரி இறப்பில் சந்தேகம்?