கர்நாடக மாநிலம், பெல்காம் மாவட்டத்தில் நிதாசோசி என்னும் கிராமத்தைச் சேர்ந்த நபர், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதுகுறித்து அறிந்த அவரது குடும்பத்தினர், அந்த நபரை அருகாமையில் உள்ள அரசு சுகாதார மையத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு போதிய வசதிகள் இல்லாததால், அவரை பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனால் விஷமருந்திய நபரை தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும் என அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியதால், அதிர்ச்சி அடைந்த அந்த நடுத்தர குடும்பத்தினர், அத்தொகையின்றி தங்களது மகனை சாலையோரத்தில் வைத்து தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விடுதியில் ரகசிய அறை அமைத்து பாலியல் தொழில் - இருவர் கைது!