கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பெங்களூருவின் பல பகுதிகளில் நீர் நிரம்பி வழிகின்றன. இந்த சூழலில், நேற்று பெய்த கனமழையால், ஹோஸ்கெரஹல்லி பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான கார்களும் ஆட்டோக்களும் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் 20 படகுகளுடன் அங்கு விரைந்துள்ளனர்.