ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுக் சிங் ரத்தோர், பிரபல குதிரை சவாரி ரைடர் ஆவர். சிறு வயது முதலே குதிரைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட ரத்தோர், தனது 5 குழந்தைகளுக்கும் குதிரை சவாரி பயிற்சியளித்து அதனை குடும்ப தொழிலாக மாற்றியுள்ளார்.
இவரின் மகன்கள் ஜப்பான், துபாய், நியூசிலாந்து என பல வெளிநாடுகளில் குதிரை சவாரியில் சாதித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, ரத்தோர் 14 கிராமத்தில் உள்ள குதிரைகளுடன் ஒரு சர்வதேச குதிரையேற்றப் பள்ளியையும் தொடங்கி, பலருக்கு கலையை கற்று தருகிறார். குதிரை சவாரி செய்யும் கலையை முடிந்தவரை ஊக்குவிப்பதே தனது ஒரே நோக்கம் எனத் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து ரத்தோர் மகன் ஜஸ்வந்த் சிங் கூறுகையில், " சிறு வயதில், நானும் என் சகோதரர்களும் குதிரைகளை தூரத்திற்கு கொண்டு சென்று விளையாடி வந்தோம். பின்னர், நாளிடைவில் குதிரையின் மீது சவாரி செய்ய கற்றுக்கிட்டோம். தற்போது, பல நாடுகளில் குதிரை சவாரியில் எனது சகோதரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குதிரை சவாரி விளையாட்டிற்காக துபாயில் இந்தியாவைப் எனது சகோதரர் பிரதிநிதித்துவப்படுத்தினார். நான் நியூசிலாந்தில் குதிரை சவாரி மூலம் மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறேன்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், " மார்வாரி, சிந்தி இன குதிரைகள் அழிந்துப்போகும் நிலையில் உள்ளன. இந்தக் குதிரை இனங்கள் வெளிநாட்டு இனத்தை விட சிறப்பு வாய்ந்தது. எனவே, அரசு இப்பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலம் அருகே விண்வெளி தொகுப்புகள்: டிட்கோ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!