ETV Bharat / bharat

குஜராத்தில் சொந்த ஊர் செல்லமுடியாமல் தவித்து நாக்கை வெட்டிக்கொண்ட நபர்

குஜராத்தில் ஊரடங்கு காரணமாக சொந்த மாநிலத்துக்குச் செல்லமுடியாத சிற்பி ஒருவர் கோயிலில், தனது நாக்கை துண்டித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Homesick migrant sculptor cuts off his tongue at temple

author img

By

Published : Apr 19, 2020, 4:31 PM IST

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவேக் ஷர்மா. சிற்பியாகப் பணியாற்றி வரும் இவர், குஜராத் மாநிலம், சுய்காம் என்னும் மாவட்டத்தில் உள்ள நாதேஸ்வரி அம்மன் கோயிலில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அவர் சுய்காம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

அவர் தனது நாக்கை துண்டித்து கைகளில் வைத்திருந்ததையடுத்து, அவரை சுய்காம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்று துணை காவல் ஆய்வாளர் பர்மர் தெரிவித்தார்.

இச்சம்பவம் நடந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் கவனித்து வருகின்றனர். விவேக் ஷர்மா 14 கி.மீ., தொலைவில் உள்ள வேறு ஒரு கோயிலில் பணியாற்றி வருகிறார். இதன்பிறகு நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் விவேக் ஷர்மா மிகுதியாக வீட்டு ஞாபகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியதில் இருந்து அவர், சொந்த இடத்திற்கு செல்ல முடியாமல் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

Homesick migrant sculptor cuts off his tongue at temple
நாக்கை வெட்டிக்கொண்ட நபர்

இதையடுத்து மற்றொரு காவல் துறை அலுவலர், இந்த அசாதாரண சூழ்நிலை மாறுவதற்காக விவேக் ஷர்மா வேண்டுதல் வைத்து நாக்கை துண்டித்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். அவர் குணமடைந்து வந்தபிறகு தான் அவர் எதற்காக நாக்கை துண்டித்தார் எனத் தெரியவரும் என காவல் துறை சார்பாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க.. டிக் டாக் விபரீதம்: லைக் கிடைக்காததால் தற்கொலை செய்த இளைஞர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.