டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் ஜமாத் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து பலர் வந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்தோனேசியா, மியான்மர், நேபால் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பலர் வந்திருந்தனர்.
இந்நிலையில் அந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் பலர் விசா விதி முறைகளை மீறி வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாவிற்கு வருவதாக கூறிவிட்டு மத ரீதியான பரப்புரை, மத தலங்களில் உரையாற்றுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...நிஜாமுதீன் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களுக்கு கரோனா சோதனை!