ETV Bharat / bharat

மருத்துவர்களுடன் அமித் ஷா கலந்தாய்வு : போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த மருத்துவர் சங்கம்! - இந்திய மருத்துவ சங்கத்தின்

டெல்லி : நாட்டு மக்களை பாதுகாக்க கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா முழுவதும் முன்னணியில் நின்று போராடும் மருத்துவர்களின் பணிகளைப் போற்றுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

HM Amit Shah speaks to doctors; appreciates their work, assures security
மருத்துவர்களுடன் அமித்ஷா கலந்தாய்வு : போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த மருத்துவர் சங்கம்!
author img

By

Published : Apr 22, 2020, 1:41 PM IST

இந்திய மருத்துவச் சங்கத்தின் (ஐ.எம்.ஏ) பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காணொலி வாயிலாக டெல்லியில் இன்று கலந்தாய்வு நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் அமித் ஷா பேசியபோது, மருத்துவர்கள் மக்கள் பணிகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாது பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரிகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சில மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் பலரை கவலையடைய வைத்திருக்கிறது.

மருத்துவர்கள் தாக்கப்படுவதும், அவர்கள் குடியிருப்புகளுக்குள் நுழைய அண்டை பகுதியினர் அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகிவிட்டது. இதனைக் கண்டித்து, இந்திய மருத்துவச் சங்கத்தினர் நாளை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது.

இந்த நெருக்கடியான இந்த நேரத்தில் மருத்துவர்கள் அடையாள எதிர்ப்பு செய்ய வேண்டாம் என்று உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, இந்திய மருத்துவச் சங்கத்தினர் தமது போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

HM Amit Shah speaks to doctors; appreciates their work, assures security
மருத்துவர்களுடன் அமித்ஷா கலந்தாய்வு : போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த மருத்துவர் சங்கம்!

மேகாலயா தலைநகர் ஷில்லாங், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை ஆகிய இரு பகுதிகளில் கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயால் உயிரிழந்த இரண்டு மருத்துவர்களின் குடும்பங்கள், அவர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யவும், அவர்களின் உடல்களைப் புதைக்கவும் உள்ளூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : இதய நோயாளிக்கு மருந்தளிக்க 160 கி.மீ பயணித்த காவலர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.