ETV Bharat / bharat

இந்துப் பெண்ணுக்கு இஸ்லாமியப் பெண்கள் நடத்திய வளைகாப்பு: CAA-வுக்கு எதிரான களத்தில் நெகிழ்வுத் தருணம்!

சென்னை: வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இந்து பெண்ணுக்கு, இந்து வழக்கப்படி இஸ்லாமியப் பெண்கள் வளைகாப்பு விழா நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

function
function
author img

By

Published : Feb 27, 2020, 12:47 PM IST

Updated : Feb 27, 2020, 12:53 PM IST

சென்னை - பழைய வண்ணாரப்பேட்டையில் கடந்த 14ஆம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதங்களைக் கடந்து இஸ்லாமிய, இந்துப் பெண்கள் முன்னின்று நடத்திவரும், இப்போராட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் பதின்மூன்றாம் நாளான நேற்று, அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி பாக்கியலட்சுமிக்கு ஒன்பதாவது மாத வளைகாப்பு நிகழ்ச்சி போராட்டக் களத்திலேயே நடைபெற்றது.

அப்போது பாக்கியலட்சுமிக்கு இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் பூமாலை மற்றும் வளையல்கள் அணிவித்து வாழ்த்தினர். மேலும், அங்கு வந்தவர்களுக்கு CAAவிற்கு எதிராக அச்சிடப்பட்டிருந்த தாம்பூலப் பையை விக்னேஷ் வழங்கினார்.

பின்னர், மேடையில் பேசிய விக்னேஷ், இந்து-இஸ்லாமியர்களின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக, இந்த முயற்சியைத் தாங்கள் செய்திருப்பதாகவும், ஒருபோதும் இந்து-இஸ்லாமியர் சகோதரத்துவத்தை யாராலும் பிரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

'வேண்டாம் சிஏஏ, வேண்டாம் என்ஆர்சி' என்று முழக்கமிட்ட பாக்கியலட்சுமி

தொடர்ந்து பேசிய பாக்கியலட்சுமி, இந்த நாளை தன் வாழ்நாளில் மறக்கமுடியாது என்றும் கூறினார். மேலும், வேண்டாம் சிஏஏ, வேண்டாம் என்ஆர்சி என்றும் அவர் முழக்கமிட்டார்.

இந்தச் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால், போராட்டக் களத்தில் தங்கள் குழந்தையுடன் வந்துப் போராடப் போவதாகவும் அந்த தம்பதியர் தெரிவித்தனர்.

கடந்த வாரம் இதே மேடையில் ஒரு திருமண நிகழ்ச்சி, இந்த வாரம் வளைகாப்பு என மதங்களைக் கடந்து மனிதர்களாக அனைவரும் கூடியிருந்தது, எல்லோருக்குமான எடுத்துக்காட்டாக தமிழ்நாடு எப்போதும் இருக்கும் என்பதை பறைசாற்றுவதாக இருந்தது.

இதையும் படிங்க: டெல்லி வன்முறையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்... ரஜினிகாந்த் எங்கே?- என். ராம் கேள்வி.

Last Updated : Feb 27, 2020, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.