இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் நோன்பு, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் சில இந்துக்களும் நோன்பு இருந்தும், இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி தயாரித்தும் சமூக மத நல்லிணக்கத்துக்கு வித்திட்டு வருகின்றனர்.
அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருப்பவர் ஹரிச்சந்திர தானூக். இந்து மதத்தைச் சேர்ந்த இவர் ரம்ஜானுக்காக இஸ்லாமியர்களுடன் நோன்பு இருந்து வருகிறார்.
இது குறித்து ஹரிச்சந்திர கூறுகையில்,
கடந்த ஐந்து வருடங்களாக ரம்ஜானுக்காக நோன்பு இருந்து வருகிறேன். அதேபோல் என் பகுதிக்கு அருகேயுள்ள முஸ்லீம் சகோதரர்கள் என்னுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
எல்லா மதமும் அனைவரும் சமம் என்பத்தைதான் உணர்த்துகிறது. ஆனால் சில அரசியல் கட்சியினர்தான் அவர்களது அரசியல் ஆதாயத்துக்காக இந்துக்களையும், முஸ்லீம்களையும் பிரிக்கின்றனர் என்று கூறினார்.