ETV Bharat / bharat

சீன எல்லைப் பிரச்னை எதிரொலி - உஷார் நிலையில் இமாச்சல் - கின்னௌர் துணை ஆணையர் கோபால் சந்த்

எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகளை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தின் பகுதிகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Himachal villages
Himachal villages
author img

By

Published : Sep 12, 2020, 5:27 PM IST

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் சீனா தனது படைகளை குவித்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்திய தரப்பும் சீனாவை ஒட்டியுள்ள எல்லை பகுதிகளில் ராணுவத்தினரை அதிகரித்து வருகிறது.

இந்தியா - சீனாவின் எல்லைப் பகுதியின் 260 கி.மீ இமாச்சல பிரதேசத்தை ஒட்டியிருப்பதால் இம்மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பகுதிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து எல்லைப் பகுதியான கின்னௌரைச் சேர்ந்த துணை ஆணையர் கோபால் சந்த் கூறுகையில், சீனாவை ஒட்டியுள்ள கிராமங்கள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள உள்ளூர் செக் போஸ்டுகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே புதிய வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு புதிய நபர்கள் வரவேண்டும் என்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்.

மாநில காவல்துறையினருடன் சேர்ந்து இந்தோ-திபெத் எல்லை காவல்படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த காஷ்மீர் சமூக செயற்பாட்டாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.