ETV Bharat / bharat

பூச்சிக்கொல்லி தடை வாழ்வாதரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் - இமாச்சலப் பிரதேச விவசாயிகள் கவலை - ஆப்பிள் விவசாயம்

சிம்லா: நாடு முழுவதும் 27 பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடைசெய்ய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு தங்கள் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் என இமாச்சலப் பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு இதோ...

Farmers
Farmers
author img

By

Published : Jun 6, 2020, 3:33 PM IST

மனிதர்கள், விலங்குகளின் பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 27 பூச்சுக்கொல்லி மருந்துகளை தடைசெய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் உற்பத்தி மற்றும் வருவாய் ஆகியவை பெருமளவில் பாதிக்கப்படும் என இமாச்சலப் பிரதேச மாநில விவசாயிகள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

"இயற்கை வேளாண்மை எங்களது உற்பத்தியைக் குறைத்துவிடும். ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை உற்பத்தி செய்யும் எங்கள் மாநிலங்களில் பூச்சிக்கொல்லி தடை என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என டிம்பிள் பஞ்சாட்டா என்ற தோட்டக்கலை விவசாயி தெரிவித்துள்ளார்.

"அரசின் இந்தத் தடையால் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அரசு எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் பாதிப்பிலிருந்து மீளவே முடியாது" என்கிறார் விவசாயி பிரேம் சர்மா.

அதேவேளை, விவசாயிகளின் கவலைகளை மறுக்கும் விதமாக இமாச்சலப் பிரதேச மாநில தோட்டக்கலைத் துறை இயக்குநர் மதன் மோகன் சர்மா தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

"அரசின் இந்த அறிவிப்பு விவசாயப் பெருமக்களைப் பாதிக்காது. அரசு நான்கு விதமான மாற்று பூச்சு மருந்துகளைத் தேர்வுசெய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பளித்துள்ளது. எனவே, விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் அச்சுறுத்தாலான பூச்சிக்கொல்லி மருந்துகளை ஆய்வுசெய்ய அனுபம் வர்மா தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்று கடந்த மே 20ஆம் தேதி 27க்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை அரசு தடைசெய்யப்போவதாக அறிவித்தது.

உலகளவில் ஆபத்தானவை எனக் கண்டறியப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்தியாவில் தொடர்ச்சியாகப் பயன்படுத்திய நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாகவே இந்த முடிவை அறிவித்துள்ளது.

இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் நிலத்தடி நீரில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் தாக்கத்தால் மனிதர்கள், விலங்குகள், தேனீக்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்குப் பாதிக்கப்படுவதாக அனுபம் வர்மா குழு தெரிவித்துள்ளது.

அரசு ஒரு வரைவறிக்கையின் மூலம்தான் தடைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்த மறுப்புகளை அடுத்த 45 நாள்களுக்கு பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் தெரிவிக்கலாம் என அரசு அவகாசம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.