வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஃபோனி புயல், தமிழகத்தில் கரையைக் கடக்காது என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. 300 கி.மீ தொலைவு வரை அது தமிழகத்தை நெருங்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் கூறியிருந்தார்.
தென் மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஏப்ரல் 29, 30, மே 1, 2 ஆகிய தேதிகளில் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஃபோனி புயல் மிகவும் வலுப்பெற்ற நிலையில் இருப்பதாகவும், அது ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.