ETV Bharat / bharat

ஆரோக்கியத்தை பாதுகாக்க மருத்துவர் சொல்லும் மூலிகை டீ! - மூலிகை டீ

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு டீ தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகிறது, ஆனால் ஆயுர்வேதத்தில் உதவி பேராசிரியரான டாக்டர் எஸ். யாஸ்மின், டீ வகைகளின் ஆரோக்கியம் குறித்து நம்மிடையே பகிர்ந்துள்ளார்.

tea benefits
tea benefits
author img

By

Published : Jun 7, 2020, 6:49 PM IST

டீ உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என பலர் கூறி வருகின்றனர். ஆனால் அதையும் தாண்டி டீ இல்லாமல் வாழ்வே இல்லை என பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஆரோக்கியமான டீ வகைகளை அருந்துவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவரான யாஸ்மின். பல்வேறு வகையான டீ அருந்துவதன் மூலம் நமக்கு என்ன மாதிரி நன்மைகள் கிடைக்கும் என விவரிக்கிறார். அதன் விவரம் பின்வருமாறு.

ரோஸ் டீ: காய்ந்த ரோஜா இதழ்கள் நான்கு முதல் ஐந்து எடுத்துக்கொள்ளவும். இரண்டு கிராம் கொத்தமல்லி விதை மற்றும் சிறிதளவு குங்கும பூ, அரை கிராம் வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி குடிக்கவும். இது நிற மேன்மைக்கும் செரிமானத்திற்கும் பயன்படுகிறது.

துளசி இலை டீ: துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்க்கவும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஏலக்கா டீ: தண்ணீரில் ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து தினமும் சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

கொத்தமல்லி டீ: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை டீ: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

முருங்கைக்கீரை டீ: கொதிக்கவைத்த தண்ணீரில் முருங்கைக்கீரையை போட்டு சிறிது நேரம் ஆறவிட்டு தேன் கலந்து அருந்தினால் விரைவில் எடைகுறையும்.

tea benefits
tea benefits

இதையும் படிங்க: பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள தொழிலபதிபர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.