ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் மழை பெய்துவருகிறது. கடந்த 13ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் கடும் வெள்ளபாதிப்பிற்கு உள்ளானது. அடுத்தடுத்த நாள்களிலும் தீவிர மழை பெய்துவருவதால் அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிதியுதவியாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து கடும் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆந்திரப் பிரதேசம் தெலங்கானா மாநிலங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பாதுகாப்பு ஏற்படுகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை தெலங்கான மாநில அமைச்சர் கே.டி.ராமா ராவ் மேற்கொண்டார்.
இதையும் படிங்க: 80 வீடுகளை குத்தகைக்கு எடுத்து ஏமாற்றிய தம்பதி