ETV Bharat / bharat

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: விவசாயிகளை ஒடுக்க 144 தடை உத்தரவு!

author img

By

Published : Nov 25, 2020, 12:58 PM IST

சண்டிகர்: பஞ்சாப், ஹரியானா மாநில எல்லைகளில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த நிலையில், அவர்களை ஒடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விவசாய போராட்டம்
விவசாய போராட்டம்

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஹரியானா மாநில எல்லை பகுதியில் குவிந்தனர். அவர்கள் டெல்லிக்கு பேரணியாக செல்ல முயற்சித்தனர். ஆனால், அவர்களை தடுக்கும் விதமாக பாஜக ஆளும் ஹரியானாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர். நவம்பர் 26ஆம் தேதி, தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள விவசாயிகள் போராட்டத்தில் 2,00,000 விவசாயிகள் கலந்து கொள்ளவுள்ளனர். பஞ்சாப் விவசாயிகளை தடுக்கும் நோக்கில் எல்லை பகுதிகளை மூட ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாரதிய கிசான் சங்க தலைவர் பல்பிர் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்பதை ஹரியானா முதலமைச்சர் நிரூபணம் செய்துள்ளார். இதுகுறித்து பல்பிர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் செல்லும் பகுதிகளில் அமைதியான வழியில் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம். சாலைகளிலேயே தர்ணாவை மேற்கொள்வோம்" என பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியை சேர்ந்த 33 விவசாய சங்கங்கள், நவம்பர் 26ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன. டெல்லிக்கு செல்ல அனுமதி மறுத்தால் தேசிய தலைநகருக்கு செல்லும் பகுதிகளில் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விமர்சித்து வருகின்றன. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.