Heavy flood in Bihar & UP : பிகார், உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும்பாலன இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, உ.பி.யில் 4 நாட்களில் மட்டும் 73 பேர் உயிரிழந்தனர்.
பிகாரில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 18 பிரிவுகளாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் பலத்த மழை காரணமாக பாட்னா மற்றும் பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தும் முழுமையாக தடைபட்டுள்ளது, கனமழையின் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு தொடர்பாக முதல்வர் நிதிஷ் குமார் வீடியோ காணொலி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
![Bihar Flood](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4589599_flood.jpg)
கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்திலும் பலத்த மழை பெய்து வருவதால் கடந்த சில நாட்களில் பலர் உயிரிழந்தனர்.