தங்கும் விடுதிகள்:
- விடுதிகளில் ஊழியர்களை பரிசோதனைக்கு பிறகே பணிக்கு சேர்க்க வேண்டும்.
- விடுதிகளில் கூட்டம் சேர்வதை தவிர்த்து தகந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- கர்ப்பிணி பெண்கள், முதியோர் என தொற்று ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் கூட்டமான இடங்களில் பணியமர்த்தப்படக் கூடாது.
- முடிந்தவரை பணம் அளிப்பதும் பெறுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் இருத்தல் நல்லது.
- விடுதிக்கு தங்கவரும் நபர்களின் முழு விவரங்களையும் கேட்டு பெற வேண்டும்.
- அவர்கள் பெட்டிகள், கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திய பின் அறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
உணவு விடுதிகள்:
- உணவு விடுதிகளில் மக்கள் முடிந்தவரை அங்கு அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்த்து உணவினை பார்சல் செய்து எடுத்து செல்ல வேண்டும்.
- 50 சதவீத வாடிகையாளர்களை மட்டும்தான் அமர வைத்து உணவு அளிக்க வேண்டும்.
- ஹோம் டெலிவிரியின்போது உணவு எடுத்து செல்லும் நபருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் அவருக்கு சானிடைஸர் கொடுத்த அனுப்ப வேண்டும். அவர் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
மால்களுக்கான கட்டுப்பாடு:
- மால்களுக்கு வரும் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் சானிடைஸர் கொடுக்க வேண்டும்.
- மாலுக்குள் நுழையும் முன்பு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம்.
- வழக்கத்திற்கும் குறைவாகவே மக்கள் மால்களில் இருக்க வேண்டும்.
- கரோனா குறித்த விழிப்புணர்வு போஸ்டர்கள், டிஜிட்டல் காணொலிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- மால் ஊழியர்கள் முடிந்தவரை வீட்டிலிருந்து பணிாற்ற அதன் உரிமையாளர்கள் ஊக்குவிக்க வேண்டும்
- தொடர்ந்து சிறுவர்கள் விளையாடும் ப்ளே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுதான் இருக்கும்.
இதையும் படிங்க: பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து: ஆளுநரின் கோரிக்கையை நிராகரித்த உத்தவ் தாக்ரே!