புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஏனாமிலும் இதே நிலைதான் தொடர்கிறது. தற்போது அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு நிலை பாதித்துள்ளது.
இந்நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஏனாம் பிராந்தியத்தில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நோயாளிகளை நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மருத்துவர்கள் தொடர்ந்து, நாள்தோறும் பரிசோதனை செய்கிறார்களா என்பதையும் கேட்டு தெரிந்துகொண்டார்.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!