புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது, " புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்து குடும்ப உறுப்பினர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக, 0413 2277542, 2278168 என்ற தொலைபேசி எண்களில் மக்கள் தொடர்பு கொண்டு நோயாளியின் பெயர், வார்டு, வயது தெரிவித்தால் நோயாளியின் தற்போதைய நிலை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த புதிய திட்டம் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்க புதுச்சேரி அரசு முடிவுசெய்துள்ளது. புதுச்சேரி அரசு சார்பில் கரோனா பணிக்காக மத்திய அரசிடம் 139 கோடி ரூபாய் அவசர நிதியாக கேட்கப்பட்டும், இதுவரை 3.8 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு புதுச்சேரிக்கு வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.