உத்தரப்பிரதேசம் மாநிலம் எடவாஹ் மாவட்டத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்கள் வித்தியாசமான முறையில் ராக்கிங் செய்யப்பட்டுள்ளனர். அதாவது சீனியர் மாணவர்கள் அவர்களை கட்டாயப்படுத்தி மொட்டையடிக்க வைத்துள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் தலை வணங்கி மரியாதையும் செலுத்த வைத்துள்ளனர். ஏராளமான மாணவர்கள் மொட்டை அடிக்க வைக்கப்பட்ட சம்பவம் பல்கலைக் கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் மொட்டை தலையுடன் திரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜ்குமார் கூறுகையில், ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், முதலாமாண்டு மாணவர்கள் கவலைப்படதேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.