ஜெய்ப்பூர்: நடிகர் சல்மான் கான் 2003இல் ஜோத்பூர் அமர்வு நீதிமன்றத்தில் தவறான வாக்குமூலத்தை சமர்ப்பித்ததற்காக மன்னிப்பு கோரியிருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நாளை வெளியாகிறது.
முன்னதாக இந்த மேல்முறையீடு வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிளாக்பக் வேட்டையாடுதல் வழக்கில் ஆஜரானார்.
கடந்த 1998 இல் ஜோத்பூருக்கு அருகிலுள்ள கங்கனி கிராமத்தில் சல்மான் கான் இரண்டு மான்களை வேட்டையாடியதற்காக கைது செய்யப்பட்டார். அப்போது, அவர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரது ஆயுத உரிமத்தை சமர்ப்பிக்க நீதிமன்றம் கோரியிருந்தது.
அப்போது அவர் தவறான தகவல் அளித்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை (பிப்.11) வெளியாகிறது.