டெல்லியில் ஓடும் பேருந்தில் 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற துணை மருத்துவ நிலை மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் மரணித்தார். நாடு முழுக்க கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங் (32), பவன் குமார் குப்தா (25), வினய் சர்மா (26) மற்றும் அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய நான்கு பேர் வருகிற 20ஆம் தேதி தூக்கிலிடப்பட உள்ளனர்.
இவர்களை நேர்க்காணல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றுக் கூறி ஊடக சங்கம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, “இவ்விவகாரத்தை திகார் சிறை நிர்வாகம் கவனத்தில் கொண்டு, நாளைக்குள் பதிலளிக்க வேண்டும்” என்றார்.
நிர்பயா வழக்கில் கடந்த 5ஆம் தேதி நீதிமன்றம் ஊடகவியலாளர்களுக்கு சில விதிமுறைகளை வகுத்திருந்தது. மேலும், குற்றவாளிகளை ஊக்குவிக்க வேண்டாம் எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது.
இதனை எதிர்த்து ஊடக சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து ஊடகவியலாளர்கள் கூறுகையில், “நேர்காணலின் பின்னணியில் உள்ள நோக்கம், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களுக்கு ஒரு தடுப்பு விளைவை ஏற்படுத்த வேண்டும் என்பதே” என்றனர்.
இதையும் படிங்க: 'எங்களிடம் நடக்காது' - பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை