ETV Bharat / bharat

ஆபத்தான நிலையில் வரவர ராவ்: சந்திக்க அனுமதி கோரும் குடும்பத்தார்!

மும்பை: பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கவிஞரும் செயற்பாட்டாளருமான வரவர ராவ் கரோனா தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என அவரின் குடும்பத்தார் மகாராஷ்டிரா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரவர ராவ்
வரவர ராவ்
author img

By

Published : Jul 20, 2020, 10:45 PM IST

பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கவிஞரும் செயற்பாட்டாளருமான வரவர ராவ் கரோனா தொற்று காரணமாக, சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, தன்னுடையே தினசரி பணிகளை கூட செய்ய முடியாமல் அவர் முடங்கியுள்ளார்.

எனவே, அவரை சந்திக்க அனுமதி தர வேண்டும் எனக் கோரி அவரின் குடும்பத்தார் மகாராஷ்டிரா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ராவின் தலையில் அடிபட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், உடல்நிலை குறித்த உண்மை விவரங்களை வெளியிட வேண்டும் என, அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வெளியான அறிக்கையில், "ராவின் உடல்நிலை, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை, ஆபத்தின் கூறுகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதில் அவரின் குடும்பத்தாருக்கு உரிமை உண்டு.

காவல்துறையினர், சுகாதாரத்துறை அலுவலர்கள் முக்கியமான விவரங்களை வெளியிடாமல் தங்களின் கடமைகளை செய்யாமல் மீறியுள்ளனர். தன்னுடையே தினசரி பணிகளை கூட செய்ய முடியாமல் தவிக்கும் அவருக்கு, உதவி செய்யும் வகையில் குடும்பத்தார் ஒருவரை அனுமதிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, குறிப்பிட்ட தொலைவில் இருந்து அவரை சந்திக்க அனுமதி வேண்டும் என மும்பை நீதிமன்றத்தில் ராவின் குடும்பத்தார் மனு தாக்கல் செய்தனர். அவர் மரண படுக்கையில் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதிகள் எஸ். எஸ். ஷிண்டே, தாவாதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை இன்று (ஜூலை 20) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பீமா கோரேகான் வழக்கை விசாரித்துவரும் தேசியப் புலனாய்வு முகமை மற்றும் மகாராஷ்டிரா அரசு இதுகுறித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2017, டிசம்பர் 31ஆம் தேதி, எல்கர் பரிஷத் அமைப்பு சார்பாக ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில், வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக வரவர ராவ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், பீமா கோரேகான் பகுதியில் நடைபெற்ற வன்முறைக்குக் காரணம் இவர்களின் பேச்சுதான் எனவும், காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கைதானவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடுபவர்கள் என சமூக ஆர்வலர்கள் கூறிவருவது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: 'ஆறு மாதங்களாக பாஜகவுடன் சேர்ந்து செயல்படும் பைலட்' - பகீர் கிளப்பும் கெலாட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.