ETV Bharat / bharat

கரோனா அனுபவம் மூலம் புதிய வாழ்க்கை வாழவேண்டும் - வெங்கையா நாயுடு

author img

By

Published : May 18, 2020, 7:07 PM IST

டெல்லி: கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் புதிய வாழ்க்கையை வாழவேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

vice president of india on coronavirus lifestyle  top mininsters of india on covid-19  lifestyle post corona  வெங்கையா நாயுடு  A New Normal for Life After Corona  Venkaiah Naidu  Vice President of India  கரோனா காலம்  கரோனாவுக்குப் பிந்தைய காலம்  corona times
கரோனா அனுபவத்தின் வாயிலாக புதிய வாழ்க்கை வாழவேண்டும்- வெங்கையா நாயுடு

கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு மே 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "கரோனா காலத்தில் பெற்ற மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை கைவிடவேண்டியது அவசியம்.

அனைத்து ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதுதான் வாழ்க்கை என்பதை இந்த பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது. ஒரு நபரை பாதிக்கும் விவகாரம் அனைவரையும் பாதிக்கிறது. அது நோயாக இருந்தாலும் சரி பொருளாதாரமாக இருந்தாலும் சரி.

கோவிட்-19 பரவுவதற்கு முன்பு ஒவ்வொருவரும் தனியாக வாழமுடியும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். சமுதாயம், குடும்பத்தின் மதிப்பை குறைத்தாலும், குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நம்பிக்கையாலும் மக்கள் தங்களால் தனியாக வாழ முடியும் என்று நம்பினர்.

ஆனால், கரோனா பெருந்தோற்று அந்த நம்பிக்கையை அசைத்துப்பார்த்து விட்டது. இயற்கையுடன் சக மனிதர்கள் இணக்கமாக வாழவேண்டிய அவசியத்தை கரோனா பெருந்தொற்று காலம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கண்ணுக்குத் தெரியாத வைரஸ் நம் வாழ்க்கையை விரைவாக மாற்ற முடியும் என்பதை இந்த காலம் நமக்கு நிரூபித்துள்ளது.

நிச்சயமற்ற தன்மை தொடர்ந்து மக்களை வேட்டையாடி வருகிறது. நிச்சயமற்ற தன்மை மனநல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நிலைமையைச் சமாளிக்க சிறந்த வழி அமைதியாக இருப்பது, நம்பிக்கையுடன் இருப்பதுதான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நிதியமைச்சரின் சிறப்பு அறிவிப்புகளில் எந்த பயனுமில்லை : ப.சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.