ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கடற்படை வீரரான கவுரவ் ஷர்மா மே 19ஆம் தேதி அன்று சோமாலியாவிலிருந்து புறப்பட்ட கப்பலில் பிரஷர் கிட் வெடித்த விபத்தில் உயிரிழந்தார். ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் கவுரவ் ஷர்மாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்செய்யப்பட்டது.
இதில், கடற்படை அலுவலர்கள், அப்பகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, துணை மேயர், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
உயிரிழந்த கவுரவ் ஷர்மா எட்டு ஆண்டுகள் கடற்படையில் பணிபுரிந்துள்ளார். திருமணம் முடிந்த மூன்று மாதங்களுக்குள் விபத்தில் உயிரிழந்திருப்பது, இவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவுரவ் ஷர்மாவின் தியாகத்தைப் போற்றும்வகையில், சவுர்யா சக்ரா விருது வழங்க வேண்டும் என உள்ளூர் மக்கள் அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர். கவுரவ் ஷர்மாவின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருவதாக ஜஜ்ஜார் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க:சுதந்திரப் போராட்ட தியாகி மருத்துவமனையில் அனுமதி: செலவை ஏற்ற முதலமைச்சர்!